Sunday, August 20, 2017

ஹஜ் மானியம் என்பது உண்மையல்ல.அது ஒரு மோசடி.Image result for air india


ஆண்டுதோறும் மக்காவுக்கு புனித பயணம் மேற்கொள்ளும் முசுலிம்களுக்கு மானியம் வழங்குவதாக இந்திய ஒன்றிய அரசு ஒரு நாடகத்தை நடத்தி வருகிறது.அந்த ''மானியம்'' எப்படி வழங்கப்படுகிறது என்று பார்த்தால் புனித பயணிகளின் வானூர்தி கட்டணத்தில் ஒரு பகுதியை அரசு ஏற்று வானூர்தி நிறுவனத்திற்கு செலுத்துகிறது.வேறு செலவினங்கள் அனைத்தையும் இந்திய ஹஜ் குழு [Haj Committee of India] பயணிகளிடமிருந்து வசூலித்து அக்குழு அதனை அவர்களுக்காக செலவிடுகிறது.ஒரு பகுதி வானூர்தி கட்டணம் தவிர்த்து ஹாஜிகளின் வேறு எந்த செலவையும் அரசு ஏற்பதில்லை.

ஹாஜிகள் ஏர் இந்தியா மற்றும் சவுதி ஏர்லைன் மூலமாகத்தான் மக்காவுக்கு [ஜித்தா மக்கா செல்வதற்க்கான வானூர்தி நிலையம்] பயணிக்க வேண்டும் என்று விதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அந்நிறுவனங்கள் ஹாஜிகள் இந்தியாவிலிருந்து ஜித்தா போக வர ஒரு கட்டணத்தை தன்னிச்சையாக நிர்ணயிக்கிறார்கள்.

அந்த வகையில் சென்னையிலிருந்து ஜித்தா போக வர இந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் ரூபாய்.79,593.ஒவ்வொரு நகரத்திற்கும் இந்த கட்டணம் வானூர்தி நிலைய வரியில் உள்ள வேறுபாடு காரணமாக வேறுபடுகிறது.வசதிக்காக நாம் சென்னையை எடுத்துக்கொள்வோம்.
ஹஜ் குழு அனைத்து நகரங்களிலிருந்தும் புறப்படும் ஹாஜிகளிடமிருந்து வானூர்தி கட்டணம் என்று .62,065 ரூபாயும் அத்துடன் அந்தந்த நகர வானூர்தி நிலைய வரியையும் வசூலிக்கிறது.சென்னை ஹாஜிகளிடம் கட்டணம் 62,065 ரூபாயும் வானூர்தி நிலைய வரி 4,239 ரூபாயும் சேர்த்து 66,304 ரூபாய் வானூர்தி பயண கட்டணமாக  ஹஜ் குழு வசூலித்துள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட கட்டணமான  ரூபாய்.79,593.ல் ஹாஜிகளிடமிருந்து வசூலித்த 66,304 ரூபாய் போக மீதி 13,289-ரூபாயை மானியம் என்று சொல்லிக்கொண்டு நடுவண் அரசு வானூர்தி நிறுவனத்துக்கு வழங்குகிறது,

இதில் கொடுமை என்னவென்றால் சென்னையிலிருந்து ஜித்தா போக வர ஒரிரு மாதத்திற்க்கு முன்பாக பயண சீட்டு வாங்கினால் சந்தை விலை வானூர்தி கட்டணம் 26,082-ரூபாய்தான்.

என்ன ஒரு அநியாயம்.சந்தை விலையை விட கூடுதலாக சுமார் 40,000-ரூபாயை ஹாஜிகளிடம் கொள்ளையடித்து விட்டு அவர்களுக்கே ரூ.13,000-மானியம் வழங்குவதாக நாடகமாடுகிறார்கள்.எத்தகைய மோசடி இது.

ஆகவே இனி வரும்  ஆண்டுகளில் உலக அளவில் ஒப்பந்த புள்ளி [International Tender ]கோரி அதில் குறைவான கட்டணம் குறிப்பிடும் வானூர்தி நிறுவனம் மூலமாகவே ஹாஜிகள் பயணிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேற்குறிப்பிட்ட ஹஜ் மற்றும் வானூர்தி கட்டண விவரங்கள் ஆதாரபூர்வமானவை.பார்க்க சுட்டிகள்.

http://www.hajcommittee.gov.in/Files/Circular/2017/circular_2017_13.pdf

https://www.cleartrip.com/flights/international/results?from=MAA&to=JED&depart_date=30/09/2017&return_date=10/11/2017&adults=1&childs=0&infants=0&class=Economy&airline=&carrier=&intl=y&sd=1503232551104&page=loaded

https://www.cleartrip.com/flights/international/results?from=MAA&to=JED&depart_date=21/10/2017&return_date=30/11/2017&adults=1&childs=0&infants=0&class=Economy&airline=&carrier=&intl=y&sd=1503237929500&page=loaded


Tuesday, July 4, 2017

பித்தலாட்டமே, உனது மறுபெயர் மோடியா ?

இன்றைய 04-07-17,தினத்தந்தி நாளிதழில் நடுவண் அரசு ஒரு முழுப்பக்க விளம்பரத்தை GST- தொடர்பாக வெளியிட்டுள்ளது.அதில் பள்ளிப்பை,செருப்பு என பல்வேறு பொருட்களுக்கு முன்பு வசூலிக்கப்பட்ட வரி விகிதத்தை விட இப்போது  GST-குறைவான விகிதமே விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

500-ரூபாய் வரையிலான செருப்புகளுக்கு பத்து விழுக்காடு விதிக்கப்பட்ட VAT தற்போது GST-யில் ஐந்து விழுக்காடுதானாம்.உண்மைதான்.ஆனால் அவர்கள் சொல்லாமல் மறைக்கும் செய்தி GST-க்கு முன்பு 200-ரூபாய் வரையிலான செருப்புகள் VAT லிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தன.200லிருந்து 500-ரூபாய் வரையிலான செருப்புகளுக்குத்தான் பத்து விழுக்காடு VAT விதிக்கப்பட்டது.இப்போது 200-ரூபாய் வரையிலான செருப்புகளுக்கும் ஐந்து விழுக்காடு வரி போட்டிருக்கிறார்கள்.இதே கதைதான் பள்ளிப்பைகள் தொடர்பாகவும்.

பார்க்க.

Good news! Low-cost footwear, school bags to remain VAT free | Zee ...


http://zeenews.india.com/business/news/economy/good-news-low-cost-footwear-school-bags-to-remain-vat-free_1870742.html

விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய பொருட்களை எடுத்து ஆராய்ந்தால் அநேகமாக இதே மோசடியை காணக்கூடும். நாட்டில் பெரும்பாலான மக்கள்  ஏழைகள்.அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்ததை மாற்றி வரி போட்டு விட்டு வரிவருமானத்தை தியாகம் செய்திருப்பதாக நாடகம் ஆடுகிறார்கள்.

பித்தலாட்டமே, உனது மறுபெயர் மோடியா ?

Wednesday, November 23, 2016

500 / 1000 ஒழிப்பு .முட்டாள்களுக்கு சொந்த புத்தியும் கிடையாது.சொல் புத்தியும் கிடையாது.

நடுவண் அரசின் நிதி அமைச்சகத்தை சேர்ந்த தேசிய பொது நிதி மற்றும் கொள்கை பயிற்சி கழகம் [National Institute of Public Finance and Policy (NIPFP)]-500 / 1000 ரூபாய் தாள்கள் ஒழிப்பு பற்றி தனது ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

பார்க்க; ;http://www.hindustantimes.com/business-news/study-says-demonetisation-may-spell-doom-for-the-economy-here-s-why/story-yVq29QZZF0HLtTN5b1cquL.html

இந்த நடவடிக்கை இந்திய பொருளாதாரத்திற்கே சாவு மணி அடிக்க கூடும் என எச்சரித்துள்ளது.பெரும்பாலும்  ரொக்க நடவடிக்கைகளையே சார்ந்து இருக்கும் இந்திய பொருளாதாரம் இந்த நடவடிக்கையால் சுருங்கி போய் மிகபபெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு சமூக கொந்தளிப்பையும் கொண்டு வரும் என எச்சரித்துள்ளது. 500 / 1000 செல்லாது என்ற அறிவிப்பை உடனடியாக திரும்ப பெறவேண்டும் அல்லது குறைந்த பட்சம் இன்னும் சில மாதங்களுக்கு அவை செல்லும் என அறிவிக்க வேண்டும் என அக்கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

மோடி தலைமையிலான முட்டாள்களின் கூட்டமோ சொந்த ஆட்களே மூஞ்சியில் காறித்துப்பி செருப்பால் அடித்தாலும் கொஞ்சம் கூட வெட்கப்படாமல் ,குட்டையில ஊறிக்கிடக்கும் எருமை மாட்டில் மழை பெய்தாற்போல எனக்கென்ன என கிடக்கிறது.

ஆம்.முட்டாள்களுக்கு சொந்த புத்தியும் கிடையாது.சொல் புத்தியும் கிடையாது.

Tuesday, November 22, 2016

கயவர்களே ,உங்கள் கல்நெஞ்சம் கரைவதற்கு இன்னும் எத்தனை பேர் சாக வேண்டும்

 வங்கிகளில் பணம் மாற்ற வரிசையில் காத்திருக்கும் கொடுமையால் இதுவரை எழுபது பேர் இறந்து போயிருக்கிறார்கள். ஜெயமோகனின் தடித்தனமான திமிர்வாதம்  இந்தக்காலகட்டத்தில் இந்தியாவில் தெருவில் எவர் இறந்தாலும் அது மோடி செய்த கொலை என்று சொல்வார்கள் என வக்கணை பேசுகிறது.அப்படியான மோடியின் அடிப்பொடிகளின் முகத்தில் அறைகிறது இந்த செய்தி.நமக்கோ நெஞ்சில் வேதனை தரும் வேலை பாய்ச்சுகிறது.

http://www.thehindu.com/news/national/other-states/Four-year-old-dies-while-waiting-for-father-to-withdraw-money-from-bank/article16675647.ece?homepage=true

மோடியின் முட்டாள்தனத்திற்க்கு நம்மில் இன்னும் எத்தனை பேர் மடிய வேண்டும்.  

ஆள அருகதையற்ற மோடி அரசே,

500 /1000 ருபாய் தாள்கள் செல்லாது என்ற அறிவிப்பை உடனே திரும்ப பெறு . உயிரிழந்தோரின் குடும்பத்திற்க்கு உரிய இழப்பீடு வழங்கு.Monday, November 21, 2016

500 / 1000 ரூபாய் தாள் ஒழிப்பில் மோடிக்கு சொம்படிக்கும் ஜெயமோகன்

Related image

 500 / 1000 ரூபாய் தாள் ஒழிப்பில் மோடிக்கு சொம்படிக்க கிளம்பிட்டாரு ஜெயமோகன்.

அவரது மொத்த குப்பையையும் கிளற வேண்டியதில்லை.அது பாத்தாலே குப்பைன்னு தெரியுது.நாத்தம் பொறுக்க முடியாது என்பதால் ஒன்றை மட்டும் பார்க்கலாம்.

கருப்பு பணம் எல்லாம் ரூபாய் தாள்களாகத்தான் இருக்குதாம்.உள்ளொளியில் அதனை கண்டடைந்த பரவசத்தில் ஆனந்த கூத்தாடுகிறார். அதற்க்கு அவர் சொல்லும் காரணம் இபபோதெல்லாம் வட்டி,நிலம்,தங்கம் ஆகியவற்றில் கறுப்பு பணத்தை போட முடியாதாம்.வட்டியும்,நிலமும் பெரிய அரசியல்,வன்முறை கும்பல் வலு இல்லாமல் செய்ய முடியாதாம்.

அய்யா அறிவாளியே,,ஒரு நூறு ஏக்கர் நிலத்தை வாங்கி அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பதற்க்கு வேண்டுமானால் அரசியல் வலு ,அடியாள் வலு தேவைப்படலாம்.ஆனால் அந்த அந்த அடுக்குமாடிகளில் ஓரிரண்டு குடியிருப்புகளை சில கோடி ரூபாய்களுக்கு வாங்குவதற்க்கு என்ன அரசியல் ,அடியாள் வலு தேவைப்படப் போகிறது.

அடுத்து திரைப்பட துறை,வீட்டு மனை தொழில் போன்றவற்றில் நூறு கோடி இருநூறு கோடி என வட்டிக்கு கடன் கொடுத்து வசூலிக்க அரசியல் ,அடியாள் வலு தேவைப்படலாம்.சில கோடிகளை வங்கிகளிலும் கடன்பத்திரங்களிலும் முதலீடு செய்ய என்ன அரசியல் ,அடியாள் வலு தேவைப்படப் போகிறது.இந்த கோடிகளெல்லாம் கருப்பாக இருக்க முடியாதா என்ன.

அடுத்து தங்கத்தில் கருப்பு பணத்தை பதுக்க மாட்டார்களாம்.கடினமாம்.இன்றைக்கு கூட நகை கடைகளில் ரசீது வேண்டாம்.VAT இல்லாமல் தங்க நகை வேண்டும் என்றால் கிடைக்கும்.இந்த பூனையோ கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருண்டு விட்டதாக கதைக்கிறது.

மோடிக்கு சொம்படிக்க அதாவது ஒரு தீமைக்கு வக்காலத்து வாங்க கிளம்பினால் இப்படித்தான்  உளறிக்கொட்டி உலகத்தோர் பார்வையில் முட்டாளாக நிற்க்க வேண்டியிருக்கும்.

Tuesday, November 8, 2016

அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் மோடியின் அரசை அழிக்கும் படை.

Image result for 500, Rs. 1000

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை .என்ற வள்ளுவரின் குறள்தான் நினைவுக்கு வருகிறது.

கருப்பு பணத்தையும் கள்ளப்பணத்தையும் ஒழிக்கிறார்களாம் .500-ரூபாய் 1000-ரூபாய் தாள்கள் இனி செல்லாது என அறிவித்திருக்கிறார் மோடி.கருப்புப்பணத்தை இந்த நடவடிக்கை ஒழிக்கும் என்பது அப்பட்டமான மோசடியான வாதம்.கணக்கில் காட்டாத கருப்புப்பணத்தை யாரும் கட்டு கட்டாக ரூபாய் தாள்களாக வைத்திருப்பதில்லை.அவற்றை நிலம்,பினாமி பெயரில் சொத்துக்கள்,வருமானம் ஈட்டும் முதலீடுகள் என்றுதான் பதுக்கி வைத்திருப்பார்கள்.

கள்ள தாள்களை ஒழிப்பதுதான் நோக்கம் என்றால் அது கேலிக்கூத்தானது.அடுத்து வரவிருக்கும் 2000-ரூபாய் தாள்களை அவர்கள் அச்சிட மாட்டார்களா என்ன.இல்லை,நூறு ரூபாய தாள்களைத்தான் அச்சிட மாட்டார்களா .

ஆக ,இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படுவது அப்பாவி பொது மக்கள்தான்.கள்ளத்தாள்கள் புழக்கத்தில் இருப்பதாக அரசே ஒப்புக்கொள்கிறது.இந்தியா போன்ற கல்வியறிவில் பின்தங்கிய மக்கள் வாழும் நாட்டில் எல்லோரும் தாள்களை பரிசீலித்து வாங்குவது சாத்தியமில்லை.இப்போது வங்கியில் மாற்ற செல்லும்போது கள்ளத்தாள்கள் கழித்துக்கட்டப்படும்.அந்த இழப்பு முழுவதும் மக்கள் தலையில் கட்டப்படும்.கள்ள தாள்களை புழக்கத்தில் விடுவதை தடுக்கவும்,எவன் கள்ள தாள்களை அச்சிட்டானோ அவனை பிடித்து தண்டிக்கவும் வக்கற்ற மோடி கும்பல் மக்களை பலியாடு ஆக்குகிறது.

கோமாளித்தனமான,துக்ளத்தனமான,இந்த நடவடிக்கையால் அடுத்த இரண்டு நாட்கள் மட்டுமல்ல,இன்னும் சில வார காலத்திற்க்கு திருமண,மருத்துவ,விவசாய ,குடும்ப,மற்றும் வணிக கொள்முதல் செலவுகளை செய்ய முடியாமல் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாக நேரிடும்.நாட்டின் பொருளாதாரமே இயங்காமல் கிட்டத்தட்ட நின்று போகும்.அலடசியமும் ,திமிரும் மிகுந்த இந்த நடவடிக்கை மோடி அரசின் மக்களை பற்றி அக்கறையில்லாத போக்கையே காட்டுகிறது.இன்று காலை முதலே மக்கள் சிறு சிறு குழுக்களாக கவலை தோய்ந்த முகங்களுடன் இது குறித்தே பேசிக்கொண்டு நிற்கிறார்கள்.

மோதியே ,எச்சரிக்கை.

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை

Thursday, June 30, 2016

ஹஜ் மானியம் என்பதே மோசடி.

ஆண்டுதோறும் மக்காவுக்கு புனித பயணம் மேற்கொள்ளும் முசுலிம்களுக்கு இந்திய அரசு ''மானியம்''வழங்குவதாக இந்திய மக்களின் மனதில் ஒரு கருத்து திணிக்கப்பட்டுள்ளது.உண்மையில் நடுவண் அரசு ஒரு பைசா கூட ஹஜ் புனித பயணிகளுக்கு மானியம் வழங்கவில்லை.அப்படி சொல்வது அப்பட்டமான பொய் .பித்தலாட்டம்.ஊரை ஏய்க்கும் நாடகம்.நடுவணில் சங் பரிவாரங்கள் ஆண்டாலும் காங்கிரசுஆண்டாலும் இந்த கபட நாடகத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.புனித பயணிகளின் வானூர்தி கட்டணம் தவிர்த்து எந்த செலவையும் அரசு ஏற்று ''மானியம்''வழங்குவதில்லை.வானூர்தி கட்டணத்தை சந்தை விலையை விட கூடுதலாக நிர்ணயித்து விட்டு அந்த கூடுதல் தொகையில் ஒரு பகுதியை புனித பயணிகளிடம் வாங்கி கொண்டு விட்டு மீதியை மானியம் என்ற பெயரில் வானூர்தி நிறுவனத்துக்கு வழங்குகிறார்கள்.

இதை புரிந்து கொள்ள சில ஆதாரங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்
.
இணைப்பில் உள்ள சுட்டியில் 2012-ஆம் ஆண்டு ஹஜ் பயணிகளிடம் வசூலிக்கப்பட்ட கட்டணத்திற்க்கான செலவு விவரங்கள் [Break-up]உள்ளன.காட்டாக,சென்னை வானூர்தி நிலையத்திலிருந்து புறப்பட்டு சவுதி அரேபியா சென்று திரும்புவது வரை ,அங்கு தங்குவது,அங்கு போக்குவரத்துக்கு ஆகும் செலவு,உணவுக்காக தரப்படும் ரொக்கம்,என அனைத்துக்கும் ஹாஜிகள் உரிய கட்டணம் செலுத்துகிறார்கள் என்பதை காணலாம்.

இறுதியாக உள்ள வானூர்தி கட்டணம் 20,000-ரூபாய் என்பதில்தான் மானியம் எனும் மோசடி அரங்கேற்றப்படுகிறது.அதை இந்த ஆண்டு ஹஜ் கட்டணத்தை வைத்து நாம் புரிந்து கொள்ளலாம்.அதற்கான சுட்டிகளை ஒரு பார்வை பார்த்து விடுங்கள்.

2016-ஆம் ஆண்டு ஹஜ் பயணிகளிடம் ரூபாய் 45.000-வானூர்தி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.ஹாஜிகள் ஏர் இந்தியா மூலமாக மட்டுமே பயணிக்க வேண்டும் என அரசு ஏகபோகத்தை நிறுவியுள்ளது,ஏர் இந்தியா சென்னையிலிருந்து சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தா நகருக்கு போக வர ரூபாய் 60,253-என கட்டணம் நிர்ணயித்துள்ளது.ஹாஜிகளிடம் வசூலித்த ரூபாய் 45.000-போக மீதி 15,250-ரூபாயை நடுவண் அரசு ஏர் இந்தியாவுக்கு செலுத்துகிறது.இங்குதான் மோசடி அரங்கேறுகிறது.
இப்போதும் சென்னையிலிருந்து ஜித்தா நகருக்கு போக வர கட்டணம் ஏர் இந்தியாவில் .37,428 தான் ஜெட் ஏர் வேஸில் 40.000தான் சவுதி அரேபியனில் 35.800தான்.

வணிக வானூர்திகளில் தனித்தனி பயணச்சீட்டு விற்பனைக்கான கட்டணம் இது. மொத்த விற்பனை [Institutional sales ]யில் இன்னும் விலை குறையும்.அதிலும் ஹாஜிகள் செல்வது போன்று பட்டய பறப்பு [chartered flight ]என்றால் இன்னும் விலை குறையும்.
அநியாயமாக 60,000-என கட்டணம் நிர்ணயித்து விட்டு சந்தை விலையை விட சுமார் எட்டாயிரம் ரூபாய் கூடுதலாக வசூலித்து விட்டு அதன் பின்னரும் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் முசுலிம்களுக்கு மானியம் வழங்குவதாக கூசாமல் பொய் சொல்கிறார்கள்.

இது மோசடி அல்லவா.

பி.கு.

2012-ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட வானூர்தி கட்டணம் 45.000-ரூபாய்.ஹாஜிகளிடம் வசூலிக்கப்பட்ட வானூர்தி கட்டணம் 20,000-ரூபாய்.அரசு வழங்கிய மானியம் 25,000 ரூபாய்.அன்றைய வானூர்தி கட்டண சந்தை விலை.18,000-தான்.