Thursday, September 2, 2010

தமிழில் வட மொழி கலப்பு-தடுப்பது ஏன் அவசியம்

தமிழில் ஏராளமான வட  மொழி சொற்கள் கலந்து மக்களிடையே புழக்கத்தில் இருந்து வருகின்றன.பல நூற்றாண்டு காலமாக தமிழ் மீது வட மொழி திணிப்பு நடந்தேறி வருவதால் தமிழ்ச்சொல் எது வடமொழிச்சொல் எது என பிரித்தறிவதே கடினமான ஒன்றாக உள்ளது.இதனால் சமத்கிருத சொற்களின்றி தமிழால் இயங்க முடியாது என்பது போன்று ஒரு பொய்த்தோற்றம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.ஆனால் உண்மை அதுவன்று.சொல்வளமும் இலக்கிய வளமும் மிக்க தமிழால் தனித்து இயங்க முடியும்.'சீரிளமை திறம்'மிகுந்த தமிழுக்கு ஊன்றுகோல் எதுவும் தேவையில்லை. .உண்மையில் தமிழ்,தெலுங்கு போன்ற மொழிகளின் துணையின்றி சமத்கிருதம்தான் இயங்க முடியாது.ஏனென்றால் அது பேச்சு வழக்கொழிந்து இறந்து பட்ட மொழி.ஆனால் நம் தாய்த்தமிழோ இன்றும் வாழும் மொழி.கோடிக்கணக்கான மக்களால் பேசப்படும் தமிழ் என்றும் அழியாது.தமிழ்த்தாயின் புதல்வர்கள் அதை அழியவும்  விடமாட்டார்கள்.                                                                                                                                                 வடமொழிச்சொற்கள் தமிழில் இருந்து அப்புறப்படுத்த பட  வேண்டும் என்று நாம் கோருவது மொழி வெறியின்  பாற்பட்டது என குற்றச்சாட்டு எழலாம்.இல்லை,நிச்சயமாக இல்லை.மொழிப்பற்று, இனத்தின் மீது கொண்ட பற்று காரணமாகவே நாம் இவ்வாறு கோருகிறோம்.மொழி என்பது வெறுமனே கருத்துக்களை பரிமாறி கொள்வதற்கான கருவி மட்டுமல்ல.அம்மொழி பேசும் மக்களின் வரலாற்று மற்றும் பண்பாட்டு பெட்டகம் அது.ஒரு இனம் எத்தகைய பண்பாடு,கலாச்சாரத்தை பின்பற்றுகிறது என்பது அவ்வினம் பேசும் மொழியை பொறுத்தே அமைகிறது.ஒரு மொழியின் மீது பிறிதொரு மொழியின் தாக்கம் என்பது தவிர்க்க முடியாத வகையில் பண்பாட்டு கலாச்சார விழுமியங்களையும் சேர்த்தே கொண்டு வருகிறது.அந்த அடிப்படையில் பார்க்கும்போது வடமொழியின் தாக்கம் தமிழ் சமூகத்திற்கு மிகுந்த தீங்கு இழைத்திருக்கிறது.                                ஜோஷ்யம்,  ஜாதகம்.அதிர்ஷ்டம்,துரதிர்ஷ்டம்,அஷ்டமி, நவமி,வாஸ்து இந்த சொற்களை பாருங்கள் அத்தனையும் வடமொழி.அத்தனையும் மூடநம்பிக்கைகள் எனவே வட மொழி என்பது அழுக்குகளை தமிழ் மீது அள்ளி இறைத்து சென்ற சூறைக்காற்று. இன்று நம் முன் உள்ள பணி அந்த அழுக்குகளை நீக்கி தாய்த்தமிழை தூய்மைப் படுத்துவதே.வட மொழி எதிர்ப்புக்கு தொல்காப்பியர் மறைமலை அடிகள் பேராசிரியர்.ம.நன்னன் என நீண்ட பாரம்பரியம் உண்டு.அந்த வரிசையில் நாமும் இணைவோம்                                                                                                                                  பி.கு.ஜோஷ்யம் வாஸ்து இவையெல்லாம் அறிவியலின் பாற்பட்டது,அவற்றை பின்பற்றலாம் என்றொரு வாதம் எழலாம்.இல்லை,அவை முற்றிலும் அறிவியலுக்கு முரணானது என்று நிறுவும் வகையில் தனிப்பதிவு  ஒன்றை விரைவில் இடவிருக்கிறோம்.நன்றி மீண்டும் சந்திப்போம்.                 .

2 comments:

 1. A language by taking words and letters from another another language becomes richer. Not only that there are certain words if taken from other languages give better and apt meaning. We called trains pukaivandi. Now electric trains have come, they are no more pukai vandikal. You may call it thodar vandi now. If they become mono rails with single coach how are going to call them, Pukai-thodar-oru vandi? It may be longer than a train itself.Try to write George Bush in Tamil without using Sanskrit Ja and Sh you will get charch puch. How ridiculous it sounds? Bharati said bring the best treasures from other languages to make Tamil richer. He did not mean translation alone. Whatever good is there in other languages let us add them to Tamil and make it richer. By accepting meaningful words and phonetically correct letters in other languages and adding them to its already rich kitty Tamil will not lose its Karpu, instead it will become a modern language. Why did Periyar call Tamil a barbarian'w language? Because you can write stories of yore beautifully in Tamil, whereas you cannot write about the latest scientific researches or technological advancements well in Tamil as you do with a modern language. That is why Periyar called it a 'Kattumirandi Mozhi'.He did not have any malice towards Tamil.In his own style he advised us to see the writing on the wall.Moreover Sanskrit is one of the, rather the best language in the world phonetically.By taking words and letter from Sanskrit Tamil will become richer. If we want to think ignorance is bliss and let us continue to be frogs in the well so be it.

  ReplyDelete
 2. பாண்டியன்,
  ஒரு மொழி வளம் பெற பிற மொழிச்சொற்களை அப்படியே கொண்டு வந்து அந்த மொழியில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று அவசியம் இல்லை. தமிழ் வளம் பெற பிறமொழிச்சொற்களுக்கு இணையான சொல்லை தமிழ் எழுத்துக்களை கொண்டே உருவாக்கி கொள்ளவேண்டுமேயன்றி அவற்றை அப்படியே கொண்டு வந்து சேர்க்க வேண்டியதில்லை.இது குறித்து எமது பிறிதொரு பதிவு உள்ளது.படித்துப் பார்க்கவும்.

  வடமொழி எழுத்துக்கள் தமிழுக்கு தேவையா.
  http://thippuindia.blogspot.com/2010/09/blog-post_04.html

  தமிழில் போதுமான அளவுக்கு சொற்கள் இருக்கும்போதே ஆரிய வந்தேறிகள் தமிழை சிதைக்க வடமொழி சொற்களை திட்டமிட்டு புகுத்தி வந்துள்ளனர்.''பயன்'' என்ற சொல்லிருக்க ''உபயோகம்'' எப்படி,ஏன் வந்தது.ஆசிரியரை ஏன் உபாத்தியாயர் ஆக்க வேண்டும்.வேலை ஏன் உத்தியோகம் ஆகவேண்டும்.இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

  // We called trains pukaivandi. Now electric trains have come, they are no more pukai vandikal. You may call it thodar vandi now. If they become mono rails with single coach how are going to call them, Pukai-thodar-oru vandi? It may be longer than a train itself.//

  உங்களை எண்ணி இரக்கப்பட தோன்றுகிறது சமத்கிருத மற்றும் ஆங்கில அடிமை மோகம் உங்களை முட்டாள்தனமாக எண்ணவும் எழுதவும் வைக்கிறது. அய்யா,பாண்டியரே Mono Rail எனபது ஒரே ஒரு பெட்டியை கொண்டிருக்கும்.அதனால் அந்த பெயரை பெற்றது என்று உங்களுக்கு சொன்னது எந்த முட்டாள்.உண்மை என்னவென்றால் பல பெட்டிகள் ஒன்றாக இணைக்கப்பட்ட அவை ஒற்றை தண்டவாளத்தின் மீது ஓடுவதால் அந்த பெயரை பெற்றது.
  பார்க்க ;http://www.google.co.in/imgres?imgurl=http://www.chennaizoom.com/monorail/monorail_2.jpg&imgrefurl=http://www.chennaizoom.com/monorail/index.php&h=350&w=438&sz=42&tbnid=zBvYzw8N

  துவக்க காலத்தில் ''train'' என்பதை புகைவண்டி என்று தமிழில் அழைத்தோம்.உண்மைதான்.அருமையான காரணப்பெயர் அது.நீராவி இயந்திரம் மூலம் இயங்கிய அக்கால தொடர்வண்டிகள் மிகுந்த புகையை வெளியேற்றியவாறு ஓடியதால் அவ்வாறு அழைக்கப்பட்டன.பின்னாளில் அவை புகையற்ற நிலைக்கு மாறியபின் தமிழ் அறிஞர்கள் புகைவண்டியை ''தொடர்வண்டி''என்று சொல்லை கொண்டு அழகாக மாற்றீடு செய்துள்ளார்கள்.இதுவே தமிழின் வளமைக்கு அழகான சான்று இல்லையா. இப்போது Mono Rail புழக்கத்தில் வருகிறது என்றால் அதற்கும் தமிழில் பொருத்தமான சொல்லை உருவாக்கலாம்.''ஒற்றைத்தட தொடர்வண்டி''.போதுமா.

  உலகில் எந்த மொழியிலும் தேவையான சொல்லை உருவாக்கி வைத்துக்கொண்டு அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்படுவதில்லை.புதிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்தான் அவற்றுக்கான சொற்கள் உருவாக்கப்படுகின்றன.monorail உருவாக்கத்துக்கு முன் அந்த சொல் புழக்கத்தில் இருக்கவில்லை.அந்த வாகனம் உருவாக்கப்பட்டபின்னர்தான் அதனை குறிக்க ஏற்கனவே இருந்த மோனோ மற்றும் rail என்ற சொற்களை இணைத்து அந்த சொல் உருவாக்கப்பட்டுள்ளது. அதே போன்றுதான் தமிழிலும் நாம் உருவாக்கிக் கொள்ளவேண்டும்.

  \\Try to write George Bush in Tamil without using Sanskrit Ja and Sh you will get charch puch. How ridiculous it sounds? //

  நீங்கள் என்னதான் மூச்சை பிடித்துக் கொண்டு முக்கித்தக்கி முயன்றாலும் ஒரு அமெரிக்கனின் பேச்சு பாணியும் நடையும் உங்களுக்கு வராது. we were going in a car என்பதை வ்வ்வீ வேழ்ழ் கோயங் இன் எ காழ் என்று சொல்வார்கள்.ஆங்கிலேயர்கள் உள்ளிட்ட பிற மொழிக்காரர்கள் தமிழை நாம் பேசுவது போன்றா பேசுகிறார்கள்,இல்லையே,ஆனாலும் அதனை நாம் கொஞ்சும் தமிழ் என எடுத்துக் கொள்வதில்லையா.ஆங்கிலேயர்கள் போலவே பேசவேண்டும் என்று உங்களை போன்ற ஆங்கில அடிமைகள் வேண்டுமானால் விரும்பலாம்.மானமுள்ள தமிழருக்கு அது தேவையில்லை.நமது பாணியிலேயே பேசலாம்.நிச்சயம் அதை பிற மொழிக்காரர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

  மீதியுள்ள உங்கள் வாதங்களுக்கான விடையாக மேலே கொடுத்துள்ள சுட்டியில் உள்ள கட்டுரையில் அரபு மொழியை சுட்டிக்காட்டி எழுதியுள்ளவற்றையும்,அந்த கட்டுரைக்கான ஒரு மறுமொழிக்கு எழுதியுள்ள விடையையும் சுட்டுகிறேன்.படித்து விட்டு உங்கள் கருத்தை எழுதலாம்.மேற்கொண்டு விவாதிக்கலாம்.

  ReplyDelete