Friday, October 8, 2010

ரசினி என்ற நரியின் சாயம் வெளுத்து போச்சு.கபட வேடம் கலைஞ்சு போச்சு

   
                                                       
                    தமிழின பகைவர் இருவரும் கூடி குலாவும் காட்சி.


சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற மராத்தியரான ரசினிகாந்த் கடந்த  05-10-10 . அன்று சிவசேனை தலைவர் பால் தாக்கரேயை அவரது இல்லத்தில் சந்தித்தார்.இருவரும் பெரும்பாலும் ஆங்கிலத்தில் உரையாடியதாகவும் சிறிதளவு மராத்தி பயன்படுத்தப் பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.மராத்தி ' பற்றாளர்' தாக்கேரே இன்னொரு மராத்தியருடன் பேசும்போது ஆங்கிலத்துக்கு அங்கு என்ன வேலை.சரி போகட்டும்.


சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ரசினி, தாக்கரே தமக்கு கடவுளை போன்றவர் என்று கூறியிருக்கிறார்.யாரை கடவுளாக கொண்டாடுகிறார்.இனவெறியையும் மதவெறியையும் அடிப்படையாக கொண்டு சிவசேனை என்ற குண்டர் படையை கட்டியமைத்து 1970 களின் துவக்கத்தில் மும்பையில் வாழ்ந்த தமிழர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி மும்பையிலிருந்து அகதிகளாக விரட்டியடித்த பால்தாக்கரே,பாபர் மசூதி இடிப்புக்கு பின் மகா ஆரத்தி என்ற பெயரில் குண்டர்களை திரட்டி மதவெறி நஞ்சை ஊட்டி அது வரை இந்திய வரலாறு கண்டிராத வகையில் முசுலிம் மக்களை கொன்று குவித்த பால் தாக்கரே,அந்த கலவரத்தை இனிவரும் நாட்கள் நம்முடையவை என்று சாம்னா ஏட்டில் எழுதி துவக்கி வைத்த பால் தாக்கரே,அந்த கலவரத்தில் உருது பேசும்,தமிழ்,மலையாளம் பேசும் முஸ்லிம்கள் மீது மட்டுமல்ல மும்பையில் வாழ்ந்த தமிழ் இந்துக்கள் மீதும் கொடூர தாக்குதல்கள் நடைபெற்று,அவர்தம் அற்ப உடமைகள் கூட சூறையாடப் பட்டு உயிர் பிழைத்தால் போதுமென்று அவர்கள் தமிழகத்திற்கு அகதிகளாக ஓடி வர காரணமாக இருந்த பால் தாக்கரே,ரசினிகாந்துக்கு கடவுளாம்.


அப்படியானால் இந்த ரசினி யார்.உழைத்து பிழைக்கும் கௌரவமான பேருந்து நடத்துனர் வேலையை திரைப்பட கிறுக்கு தலைக்கேறிப்போய் உதறி விட்டு ஊரை ஏய்த்து பிழைக்கும் திரைப்பட நடிகர் வேலை தேடி வெறுங்கையுடன் சென்னைக்கு வந்த ரசினி இன்று பல்லாயிரம் கோடிகள் மதிப்பிலான செல்வத்துக்கு உரிமையாளர்.


இதைத்தான் ''என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழல்லவா என் உடல்,பொருள்,ஆவி தமிழுக்கும் தமிழர்க்கும் தருவது முறையல்லவா''என்று வாயளவில் சொல்லும் ரசினி செயலளவில் ''உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும்'' கயமையை தயங்காமல் செய்கிறார்.


ரசினி தனது தமிழின பகையையும் வெறுப்பையும் கக்குவது இது முதல் முறையல்ல.கடந்த அ.தி.மு.க.ஆட்சியின் போது காவேரி பிரச்னை கொழுந்து விட்டு எரிந்தபோது ஒட்டு மொத்த தமிழகமும் கர்நாடகத்தின் அநீதிக்கு எதிராக கொந்தளித்து போராடியது.திரைத்துறையினரும் தமது போராட்டத்தை நெய்வேலியில் நடத்தினர்.அதில் கலந்து கொள்ள மறுத்த ரசினி அதற்கு சொன்ன காரணம்,


''கர்னாடகவுலேர்ந்து தண்ணி வரணும்னு கேட்குற கூட்டத்தில நான் இருப்பேன்.அங்கேர்ந்து blood வரணும்னு கேட்கிற கூட்டத்தில் நான் இருக்க மாட்டேன்'' என்பதுதான்.


அநீதி இழைக்கப்படுபவரகளையே அநீதி இழைப்பவர்களாக காட்டும் நயவஞ்சகம் இல்லையா இது.காவேரி தீர்ப்பாயம் 1991 -ல் இடைக்கால தீர்ப்பு வழங்கியபோது அதை எதிர்த்து கர்நாடகத்தில் கலவரம் செய்த கன்னட வெறியர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்களை கொன்றொழித்தனர்.பல்லாயிரம் தமிழர்களை தமிழகத்திற்கு அகதிகளாக விரட்டியடித்தனர்.ஆனால் தமிழகத்தில் அப்போதும் சரி அதன்பின் இன்று வரையிலும் சரி கன்னடர்கள் மீது எந்த தாக்குதலும் நடைபெறவில்லை.ஏனென்றால் தமிழரின் மக்கள்நாயகப் (democratic) பண்பும் நியாய உணர்வும் அத்தகையது.மேலும் தமிழகத்தில் இன,மொழிப் பற்று உண்டேயன்றி இன, மொழிவெறி கிடையாது.அத்தகைய தமிழ் மக்கள் கர்நாடகத்திலிருந்து குருதி கேட்கிறார்கள் என்று பழி சுமத்திய ரசினி தமிழினத்தின் பகைவனா,நண்பனா.


இந்த ரசினிதான்அரசியல் கட்சி துவங்கி தமிழக ஆட்சியை கைப்பற்றும் கனவிலும் மிதக்கிறார்.ஒரு யந்திரன் திரைப்படத்தை வைத்து தமிழக மக்களிடமிருந்து பல நூறு கோடிகளை கொள்ளையடித்த கொள்ளைகும்பலின் தலைவன் ரசினியின் கையில் தமிழக ஆட்சி சிக்குமேயானால் தமிழகத்தையே  மொட்டையடித்து விட மாட்டாரா.


உடன் பிறவா சகோதரிகளும்,அண்ணன்களும் தமிழின தளபதிகளும் இந்த வித்தைகள் நமக்கெல்லாம் தெரியாமல் போய்விட்டதே என வருத்தப்படும் அளவிற்கு அவரது செயல்பாடுகள் இருக்காதா.எண்ணிப் பாருங்கள்.


இனப்பகைவர்களை அடையாளம் காண்போம்.அவர்களை புறக்கணிப்போம்.         

13 comments:

 1. என்ன எந்திரன் என்னும் அறிவியல் படம் நடிச்சிட்டு கடவுள் பற்றி பேசுறார் , இமையமலைக்கு போறார் .. எல்லாமே ஊருக்கு தானா ?

  ReplyDelete
 2. தமிழ்,தமிழினம்,தமிழ்பற்று யென்று உங்களை அடையாளப்படுத்திக்கொண்டு, உங்களது இசுலாம் மதம் சார்ந்த ஒரு விடயத்தை மட்டுமே முன்னிறுத்தி,அதையே முக்கியம்சமாக குறிப்பிட்டு உள்ளதை படிக்கும்போது நெருடலாய் உள்ளது.

  //இனப்பகைவர்களை அடையாளம் காண்போம்.அவர்களை புறக்கணிப்போம். //

  இங்கே நீங்க சொல்லும் இனம் என்பது தமிழினம் இல்லை, மாறாக உங்கள் மதம் சார்ந்த இனம் என்பதை என்னாலும் உணர முடிகிறது.

  தமிழனாய்...
  ச.இமலாதித்தன்
  www.tamilvaasal.blogspot.com

  ReplyDelete
 3. சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற மராத்தியரான ரசினிகாந்த் கடந்த 05-10-10 . அன்று சிவசேனை தலைவர் பால் தாக்கரேயை அவரது இல்லத்தில் சந்தித்தார்.இருவரும் பெரும்பாலும் ஆங்கிலத்தில் உரையாடியதாகவும் சிறிதளவு மராத்தி பயன்படுத்தப் பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.////////////////  செய்திகள் வெளியாகி உள்ளன.எந்த செய்திகள்,எந்த மீடியா வெளியிட்டது என்று சொல்ல முடியுமா,முடியாது ஏனென்றால் அது உண்மை இல்லை.அப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு பொய்யான செய்திக்கு நீங்கள் கண்ணு காது மூக்கு வைத்து பேசுவதை நிறுத்துங்கள்

  ReplyDelete
 4. rajini down down , tamilnada vittu veratanum inga rajini ya , inga tamilan na vachi kodi kodi ya sampathichi tu . railway exam etlutha pona vaingalai yey adichi veratai ya enaveri peditha van kuda konchi kulauran. manakedu , inimay yavathu rajini fans should think

  ReplyDelete
 5. rajini kita piditchathu hard work athu unmaithan.Tamilnadu la than avara respect panni neraya fans irukanga.avar epadi cinema la naditchalum ethukaranga.But Kamal hasan igaye poranthu ingaye sathikanum nu ninikarar, avara yarum avalava kanduka matranga athu why nu therila?. rajini neraya important problem appa tamilan sa emathi than irukar atha ellam eppadi tamilan marakaranga nu therila. avaroda mandapam,school la kuda poor family ku idam illai.avar tamil people ku enna panni irukarnu avanga fans ku kuda theriyathu. avanga aim ellam money money money athuku inga iruka appavinga kita kollai adika mudium.Koncham yoshinga tamil people.

  ReplyDelete
 6. இன்றைய டாப் பிரபல தமிழ் வலைப்பதிவுகளை WWW.SINHACITY.COM இல் காணுங்கள்

  ReplyDelete
 7. ச.இமலாதித்தன் said...

  தமிழ்,தமிழினம்,தமிழ்பற்று யென்று உங்களை அடையாளப்படுத்திக்கொண்டு, உங்களது இசுலாம் மதம் சார்ந்த ஒரு விடயத்தை மட்டுமே முன்னிறுத்தி,அதையே முக்கியம்சமாக குறிப்பிட்டு உள்ளதை படிக்கும்போது நெருடலாய் உள்ளது.  இங்கே நீங்க சொல்லும் இனம் என்பது தமிழினம் இல்லை, மாறாக உங்கள் மதம் சார்ந்த இனம் என்பதை என்னாலும் உணர முடிகிறது//


  மிக சரியாக சொல்லி இருக்கிறிர்கள் ச.இமலாதித்தன்.

  ReplyDelete
 8. Excellant article atleast now people of Tamilnadu should and must learn about the double acting of rajani when he comes to bangalore he talks one and when he is in chennai he talks something else regardin cauvery issue.his ultimate idea is that his film has to run succsesfuly
  in mumbai so he praise balthackrey

  ReplyDelete
 9. atleast now tamil people should encourage tamil speaking tamil artist rather than inviting outsiders to reach the top position like rajani and cheat them in this way.he is a chameleon [pachondi] it is the fate of tamil people that they always belive and like outsiders ultimately they will be cheated like this awake tamils.

  ReplyDelete
 10. //தமிழ்,தமிழினம்,தமிழ்பற்று யென்று உங்களை அடையாளப்படுத்திக்கொண்டு, உங்களது இசுலாம் மதம் சார்ந்த ஒரு விடயத்தை மட்டுமே முன்னிறுத்தி,அதையே முக்கியம்சமாக குறிப்பிட்டு உள்ளதை படிக்கும்போது நெருடலாய் உள்ளது//

  இமலாதித்தன்,
  பதிவில் இசுலாமிய மதம் தொடர்பான பொருள் (விடயம்) ஏதுமில்லை.இந்த பதிவில் மட்டுமல்ல எமது வலைப்பூ முழுவதும் தேடினாலும் மதசார்பான கருத்துக்கள் எதையும் நீங்கள் காண முடியாது.1992 -93 மும்பை கலவரத்தின்போது முசுலிம்கள் மீது மட்டுமல்ல மும்பை வாழ் தமிழர்கள்,அவர்கள் இந்துக்கள் என்றபோதும் கூட,மீதும் தாக்குதல்கள் நடைபெற்றன என்ற வரலாற்று நிகழ்வுதான் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதில் நெருடுவதற்கு மதம் சார்ந்த கருத்து என்ன இருக்கிறது.

  //இங்கே நீங்க சொல்லும் இனம் என்பது தமிழினம் இல்லை, மாறாக உங்கள் மதம் சார்ந்த இனம் என்பதை என்னாலும் உணர முடிகிறது//

  தமிழினத்தின் நலன் என்ற போர்வையில் முசுலிம்களுக்கு மட்டும் நலன் பயக்கக்கூடிய வகையில் எழுதி இருந்தால் அதை எடுத்து காட்டிவிட்டு இப்படி ஒரு கருத்தை நீங்கள் பதிவு செய்திருக்க வேண்டும்.உண்மையில் அப்படி எதையும் உங்களால் காட்ட முடியாது. இருந்தால்தானே காட்டுவதற்கு.

  முசுலிம் என்பதால் எமது தாய்மொழியாம் தமிழ் மீதும் அம்மொழி பேசும் இனத்தின் மீதும் பற்று வைக்க எமக்கு உரிமையில்லையா.தமிழினம் ஒன்றுக்கு மேற்பட்ட மதங்களை பின்பற்றுவதால் ஒரே தேசிய இனம் இல்லை என்றாகிவிடுமா

  ReplyDelete
 11. //சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற மராத்தியரான ரசினிகாந்த் கடந்த 05-10-10 . அன்று சிவசேனை தலைவர் பால் தாக்கரேயை அவரது இல்லத்தில் சந்தித்தார்.இருவரும் பெரும்பாலும் ஆங்கிலத்தில் உரையாடியதாகவும் சிறிதளவு மராத்தி பயன்படுத்தப் பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.////////////////  செய்திகள் வெளியாகி உள்ளன.எந்த செய்திகள்,எந்த மீடியா வெளியிட்டது என்று சொல்ல முடியுமா,முடியாது ஏனென்றால் அது உண்மை இல்லை.அப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு பொய்யான செய்திக்கு நீங்கள் கண்ணு காது மூக்கு வைத்து பேசுவதை நிறுத்துங்கள்//

  முத்து

  நீங்கள் கேட்ட ஆதாரம்.
  06 -1o -10 நாளைய இந்து நாளேடு.பக்கம் 13.

  ReplyDelete
 12. முத்து
  ஆதாரத்திற்கு இந்த வலைப்பதிவை பார்க்கவும்
  http://www.thehindu.com/todays-paper/tp-national/article815320.ece

  ReplyDelete
 13. //ச.இமலாதித்தன் said...

  தமிழ்,தமிழினம்,தமிழ்பற்று யென்று உங்களை அடையாளப்படுத்திக்கொண்டு, உங்களது இசுலாம் மதம் சார்ந்த ஒரு விடயத்தை மட்டுமே முன்னிறுத்தி,அதையே முக்கியம்சமாக குறிப்பிட்டு உள்ளதை படிக்கும்போது நெருடலாய் உள்ளது.

  //இனப்பகைவர்களை அடையாளம் காண்போம்.அவர்களை புறக்கணிப்போம். //

  இங்கே நீங்க சொல்லும் இனம் என்பது தமிழினம் இல்லை, மாறாக உங்கள் மதம் சார்ந்த இனம் என்பதை என்னாலும் உணர முடிகிறது.

  தமிழனாய்...
  ச.இமலாதித்தன்
  www.tamilvaasal.blogspot.com//

  Dear Imalathiththan,
  இப்போதுதான் தெரிகிறது, இந்தியாவில் எவ்வாறு ஒவ்வொரு சொல்லுக்கும் அழுக்கான மதச்சாயம் பூசப்படுகின்றதென்று...
  எந்த ஒரு நல்ல விடயத்தை யார் வந்து சொன்னாலும் அதற்கு மதச்சாயம் பூச உன்னைப்போல் உங்கள் இந்தியாவில், தமிழ் நாட்டில் சில காடையர்கள் இருக்கும்வரை உங்கள் கதி இதே கதிதான், அதோ கதிதான்!!!!
  உன் கருத்துரையை மீட்டுப்பார், யார் மதவெறியன் என்று தெரியும்.
  இப்படிக்கு... ஒரு இந்தியன் அல்லாத (உன்னைப்போல் ஒரு சிலர் இருப்பதால் இந்தியன் ஆக விரும்பாத) ஒரு மனிதன்!!
  (மற்ற இந்தியர்கள் என்னை மன்னிக்கவும், தயவு செய்து...)

  ReplyDelete