Tuesday, October 12, 2010

ராசபக்செவுக்கு சிவப்பு கம்பளம்.வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் இந்திய அரசு.


தில்லியில் நடைபெற்று வரும் பொது செல்வ நாடுகள் விளையாட்டு போட்டிகள் நிறைவு விழாவில் தலைமை விருந்தினராக இன வெறியன் ராசபக்சே கலந்து கொள்வார் என செய்திகள் வெளியாகியுள்ளன.பல்லாயிரம் ஈழத்தமிழர்களை பன்னாட்டு போர் நெறிகளை மீறி கொன்று குவித்த,இலக்கக் கணக்கான ஈழ மக்களை முள்கம்பி வேலிக்குள் அடைத்து வைத்து மகிழும்,ஈழ நாட்டையே திறந்த வெளி சிறையாக்கி எம்மின சகோதரர்களை வதைக்கும்,அம்மிருகம் நம் வரிப்பணத்தில் விருந்துண்டு களிக்க வருகிறது.
                                                             போர் முடிந்தபின் ஈழ நிலைமைகளை நேரில்  கண்டு வர இந்தியாவிலிருந்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டது.அக்குழுவினர் இலங்கையின் அரசுத்தலைவர் என்ற முறையில் ராசபக்செவையும் சந்தித்தனர்.அப்போது அக்குழுவில் இடம் பெற்றிருந்த திருமாவளவனை சுட்டிக்காட்டி ''இவர் பிரபாகரனின் நெருங்கிய நண்பர்.அந்த சமயத்தில் இவர் அங்கு இருந்திருந்தால் இவரையும் போட்டுதள்ளியிருப்போம்''என்று சொன்னார்,இது ஆதாரபூர்வமாக ஏடுகளில் வெளிவந்த செய்தி.இன்னொரு நாட்டின் பிரதிநிதியாக தம்மை சந்திக்கும் தூதுக் குழுவினரிடம் ஒரு அரசுத்தலைவர் பேசுகிற பேச்சா இது.ஆகவே ராசபக்சே அரசுதந்திர உறவுகளில் கடைபிடிக்க வேண்டிய நாகரீகத்தை காற்றில் பறக்க விடும் நாகரீகமற்ற ஒரு மூளையற்ற முண்டம் இல்லையா.ஒரு அரசுத்தலைவர் இப்படி பேசுகிறார் என்றால் அவரது உள்ளம் எத்தகைய இனவெறி கொண்டதாக இருக்கவேண்டும்.
                                                             இப்படிப்பட்ட ஒருவர் நிறைவு விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொள்ள தகுதி உடையவரா.
                                                              இந்த நிறைவு விழாவை புறக்கணிக்க போவதாக திருமாவளவன் அறிவித்துள்ளார்.பன்னாட்டு நீதிபதிகள் தீர்ப்பாய விசாரணையிலிருந்து ராசபக்சேவை பாதுகாக்கவே இப்படி ஒரு கௌரவத்தை அவருக்கு இந்திய அரசு வழங்குவதாக வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருசுனசாமியும் ராசபக்சே வருகையை எதிர்த்துள்ளார்.ஆனால் இதற்கெல்லாம் இந்திய ஆளும் கும்பல் மசியப்போவதில்லை.சிங்களவனின் இனவெறிக் குட்டையில் நீந்திக் களிக்கும்  எருமைகள் மழைத்தூரலுக்கா அஞ்சப்போகின்றன.
                                                         
                                                         ஆகவே எமது வலைப்பூ விருந்தினர்களுக்கு நாம் விடுக்கும் வேண்டுகோள்;
                                                  நிறைவு விழா நிகழ்ச்சிகளின் தொலைகாட்சி நேரடி ஒளிபரப்பை புறக்கணிப்போம்.தமிழர்கள் மட்டுமல்ல பிற மொழி சகோதரர்களையும் நமது வருத்தத்தை எடுத்து சொல்லி புறக்கணிக்க வேண்டுவோம்.நமது இந்த சிறுபொறி காட்டுத்தீயாக பற்றி பெருந்தொகையினர் புறக்கணிப்பார்களேயானால் வருமானம் போய்விடுமே என்ற கவலையில் தொலைக்காட்சி முதலாளிகளே இனி வரும் காலங்களில் ராசபக்சேவை விரட்டும் பொறுப்பை ஏற்றுக்கொள்வார்கள்.          

2 comments:

 1. தமிழ்நாட்டு தமிழனுக்கு "சொரணை"
  செத்து பல காலம் ஆகிவிட்டது.
  சுயவரலாற்றை,சுய மரியாதையை
  மறந்த மடையர்கள்,நாம்.

  ReplyDelete
 2. பொதுநலவாய நாடுகளின் கூட்டமைப்பில் இருந்தே இந்தியா வெளியேற வேண்டுமென்பது ஒவ்வொரு உண்மையான இந்தியக் குடிமகனின் ஆசை, அடிமைத்தனத்தின் விசுவாசம் தான் இந்த பொதுநலவாய நாடுகளின் கூட்டமைப்பு.

  நாம் என்ன இன்னும் அடிமையா..??

  மேலும் இந்தியா உள்நாட்டிற்குள் நடத்திக்கொண்டிருக்கும் இனப்படுகொலையை எப்படி இன்னும் மேலெடுத்துச் செல்வது என்பது குறித்த ஆலோசணைக்க்காகவும், ஒரு தன்மானமற்ற கூட்டம் தமிழ்நாடேனும் மாநிலத்தில் இருக்கிறது என்பது தெரிந்திருப்பதனாலும், மேலும் மேலும் இழிவுபடுத்தினாலும் தமிழர்களுக்கு உரைக்காது என்பதினாலும் வரச் சொல்லியிருக்கலாம்.

  இதுகண்டு கொதித்தெழும் உண்மைத் தமிழ் நெஞ்சங்களின் ஊடே நானுன் கலந்து கொள்கிறேன்.....!!

  தங்கள் பதிவு அருமை நன்றி..!!!

  ReplyDelete