Sunday, January 9, 2011

தேசிய பிற்போக்கு மூடர் கழகம்.கூலம் மாநாடு.ஒரு நேரடி அறிக்கை.

இன்று கூலம் மாநகரில் தேசிய பிற்போக்கு மூடர் கழகம் நடத்திய மாபெரும் ''மக்கள் அறிவு பறிப்பு''மாநாட்டுக்கு நேரில் சென்று அதன் தலைவர் நடிகர் ''ராப்டன்''பசயகாந்தின் வரலாற்று சிறப்புமிக்க உரையை நேரில் கேட்கும் பாக்கியம் கிடைக்கப் பெறாதவர்களுக்காக இந்த அறிக்கையை மிகுந்த இடர்பாடுகளுக்கு இடையே ''பாணியர் புகடன்''மற்றும் ''அக்கீரன்''செய்தியாளர்களின் குறிப்பேடுகளை கழுத்து வலியை பொருட்படுத்தாமல் எட்டி எட்டி பார்த்து எழுதி வெளிடுகிறோம் என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம்.


70 ஏக்கர் பரப்பிலான  மாநாட்டு திடல்.50  க்கு 120 அடியளவில் பிரமாண்டமான மேடை,பாதுகாப்புக்கு 2000 காவல்துறையினர் என்று தடபுடலாக நடந்த மாநாட்டில் உரையாற்றிய ராப்டனின் துணைவியார் ''தலைவருக்கு -அதாங்க அவங்க வீட்டுகாரருக்கு-டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது.எனவே தமிழகத்தின் அனைத்து குடும்பங்களுக்கும் அவர்தான் இனிமேல் டாக்டர்'' என்று ஒரே போடாக போட்டார். மாநாட்டுக்கு முன்னரே 2005 குதுரை மாநாட்டை போன்று தமிழக அரசியலில் மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்த போகும் மாநாடு என அறிவித்தவர் ஆயிற்றே கிடைத்த வாய்ப்பை விடுவாரா.நல்வாய்ப்பாக டாக்டருக்கு நான்தான் ''நர்சு''என சொல்லாமல் விட்டாரே.அதுவரை நமக்கு மகிழ்ச்சிதான்.


குதுரை மாநாட்டில் பசயகாந்த் ''திருப்பிய திருப்பு'' போதாதென்று 2010 -ல் மீண்டும் ''விட்டு திருப்ப''வந்திருக்கிறார்.என்ன திருப்ப போகிறார் என்று அறிந்துகொள்ள கூட்டமே ஆவலோடு காத்திருந்தது.


சிறப்புரை ஆற்ற எழுந்தார் ''ராப்டன்''.கூட்டத்தில் ஒரே பரபரப்பு.கூட்டணி கூட்டணி என்று கிளிப்பிள்ளை போல் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக கத்திகொண்டிருக்கும் ராப்டன் அதுபற்றி என்ன அறிவிக்க போகிறார் என்று ஆவலானார்கள் மாக்கள்,மன்னிக்கவும்,மக்கள்.வரலாற்றின் ஏடுகளில் நீங்கா இடம் பெற போகும் அந்த உரையை அப்படியே தருகிறோம்.


''இந்த மாநாட்டுக்காக 1500 கிலோ மீட்டருக்கு பேனர் வச்சிருக்காங்க என்னோட தொண்டர்கள்.இதுக்கு நான் காசு கொடுக்கல.அன்பா வச்சிருக்காங்க.''---அப்போ அச்சடித்து தந்தவர் ஏமாளியா அல்லது ஊரை அடித்து உலையில் போடும் கலையில்  தொண்டர்கள் இப்போதே தேறிவிட்டார்களா---''இந்த மாதிரி நீண்ட தொலைவுக்கு வேறு கட்சி மாநாட்டுக்கு பேனர் வைத்ததுண்டா.எனவே தமிழக மக்கள் தே.பி.மு.க.வை ஆட்சியில் அமர்த்தவேண்டும்.கருணாநிதியின் குடும்ப அரசியல் ஒழியனும்.அந்த இடத்தில் எனது குடும்பம் அரசியல் நடத்த வேண்டும். அதற்காகத்தான் என் மனைவி குழந்தைகள் மற்றும் மச்சான்கள் புடை சூழ நான் அரசியலில் குதித்திருக்கிறேன்.நான் ஆட்சியை பிடிக்காமல் ஓயமாட்டேன். அதற்காக நான் யாருடன் வேண்டுமானாலும் கூட்டு சேர்வேன்.மக்களோடு கூட்டு சேர்வேன்.தெய்வத்தோட கூட்டு சேர்வேன்..அவுங்க கேட்கிற தொகுதிகளை கொடுப்பேன்.யாரோடு வேண்டுமானாலும் கூட்டு வைப்பேன்.எனக்கு நீங்க ஒட்டு போடுங்க.அப்போதான் நாடு நல்லா இருக்கும்.குறிப்பா நாங்க நல்லா இருப்போம். ஒரே குடும்பம் மீண்டும் மீண்டும் ஆள நினைப்பது என்ன நியாயம்.இதுக்கு பேரு சனநாயகமா.எங்க குடும்பமும் ஒருமுறை ஆளட்டுமே. என்ன கொரஞ்சிற போகுது.


எனக்கு அரசியல பத்தி என்ன தெரியும்னு சில பேரு கேக்குறாங்க.அரசியல பத்தி எதுவுமே தெரியாமலா இந்த அளவுக்கு உளறியே கட்சி நடத்திக்கொண்டு இருக்கேன்.ஆட்சியை பற்றி எனக்கு என்ன தெரியும் நான் நாடாள முடியுமா என்றெல்லாம் கேட்கிறார்கள்.நான் கேட்கிறேன்.ஒரு அரசாங்கம் படத்தில் நடித்தவனுக்கு அரசாங்கம் நடத்த தெரியாதா.---''என்னங்க தோசை சுட தெரிந்த எனக்கு துப்பாக்கியை எடுத்து சுட தெரியாதா''என்ற வடிவேலுவின் வசனம் உங்களுக்கு நினைவு வந்தால் அதற்கு யாம் பொறுப்பல்ல.-- -எழுதி குடுத்த வசனத்தை அப்படியே பேசி நடித்த எனக்கு நீட்டிய பைலில் கையெழுத்து போட தெரியாதா.


இப்படியே கழுதை விட்டை போடுவதுபோல் ஒரு மணி நேரத்திற்கும் மேல் மணி மணியாக கருத்துமழை பொழிந்த ராப்டன் இறுதியாக கூட்டத்தினரை நோக்கி ''கூட்டணி வைக்கனும்னு சொல்றவங்க எல்லாம் கைய தூக்குங்க''என்று மழலையர் பள்ளி ஆசிரியை போன்று உத்தரவு போட்டார்.அத்தனை பெரும் கைதூக்கினர்.''வேண்டாம்னு சொல்றவங்க கைதூக்குங்க''என்று அடுத்து அவர் கேட்க யாரும் கைதூக்கவில்லை.''சரி கூட்டணி வைப்போம்.யாருடன் கூட்டணி என்பதை நா பாத்துக்கிறேன்.நீங்க கவலை படாதீங்க,நா பாத்துக்கிறேன்'' என்று மாடு விற்க வந்த விவசாயிடம் மாட்டு தரகர் சொல்வது போன்று ஐந்தாறு தடவை சொல்லி தனது உரையை முடித்துக்கொண்டார் ராப்டன். 


இதற்கு மேல் இத்தகைய உளறல்களை சகிக்க முடியாது என்பதாலும் இரண்டு மணி நேரம் உரையாற்றாத இரக்க குணத்திற்காகவும் நாமும் அவருக்கு நன்றி கூறி நிறைவு செய்கிறோம்.1 comment:

  1. அவரு 'கட்டிங்' போட்டுக்கொண்டு மேடையில் உட்கார்ந்து மற்றவர்கள் பேசியதை கண்ணை சொறுவியபடி பார்த்ததை கேப்டன் தொலைக்காட்சியின் நேரடி ஒளிப்பரப்பில் பார்த்தேன்.

    இரண்டாடுகளுக்கு முன் யாரு அதிகமா சரக்கு அடிச்சதுன்னு விசயகாந்தும், செயலலிதாவும் மாற்றி மாற்றி அறிக்கை விட்டுக்கொண்டது இப்போது நினைவுக்கு வந்தது.

    குடிகாரநாய்கள் நாட்டுமக்களின் தலையெழுத்தை முடிவு செய்யவது வெட்கக்கேடு..

    ReplyDelete