Saturday, April 23, 2011

நடிகை சொர்ணமால்யா என்ற நாகரீகமற்ற மனிதப்பதர்.

இன்று விசய் தொலைக்காட்சியில் ''அது இது எது''என்ற நிகழ்ச்சியை பார்க்க நேர்ந்தது.மூன்று நடிகர்கள் பங்கு பெற்று தங்கள் ''அறிவாற்றலை'' வெளிப்படுத்தும் நிகழ்ச்சி அது.நடிகை சொர்ணமால்யா,நடிகர் விசய் ஆதிராச்,மற்றும் ஒரு நடிகை [பெயர் தெரியவில்லை]கலந்து கொண்டனர். நகைச்சுவை என்ற பெயரில் ஏதேதோ உளறிக் கொண்டிருந்தனர். அதுவல்ல பிரச்னை.

ஒரு கட்டத்தில் ''சேகர் எம்போரியம்'' என்ற துணிக்கடையில் பணியாற்றும் தொழிலாளர்கள் என்று மூவர் கையில் துணி மூட்டையும் சேலை ஒன்றையும் பிடித்தபடி வந்து நின்றனர்.அதில் இருவர்தான் உண்மையில் அந்த கடையில் பணியாற்றுபவர்களாம்.மூன்றாவது நபர் போலியாம்.அவர் யார் என்று கண்டுபிடித்து சொல்லுமாறு நிகழ்ச்சி நடத்துனர் மூவருக்கும் ''போட்டி''வைத்தார்.மூவரும் ஆளுக்கு ஒருவரை சுட்டிக்காட்டினார்கள். ஏன் அவரை போலி என்கிறீர்கள் என்று கேட்டதற்கு ஆளுக்கொரு காரணம் சொன்னார்கள்.சொர்ணமால்யா சொன்ன காரணம். ''அவர் சேலை விற்க வந்தவர் போல் தெரியவில்லை.சேலை திருட வந்தவர் போல் இருக்கிறார்'' என்பதுதான்.


என்ன ஒரு ஆணவமிக்க அகங்காரமான பேச்சு பார்த்தீர்களா.பாவம்,அந்த தொழிலாளி முகம் வாட பரிதாபமாக சிரிக்க முயன்றவாறு நின்று கொண்டிருந்தார்.சக மனிதர் ஒருவரை இவ்வளவு கீழ்த்தரமாக அவமானப்படுத்த அந்த நடிகையால் முடிகிறதென்றால் அவர் மனம் எந்த அளவுக்கு வக்கிரம் பிடித்ததாக இருக்க வேண்டும். காஞ்சி ஆச்சாரியார் கொலை வழக்கில் கைதான போது காவல் நிலைய படிக்கட்டுகளில் ஏறி இறங்கி அம்பலப்பட்டு போன இந்த நடிகை உழைத்து பிழைக்கும் ஒரு மனிதனை அவமானப்படுத்த துணிவது குயிலைப் பார்த்து கோட்டான் பழித்த கதையல்லவா.


இறுதியாக அந்த மனிதப்பதருக்கு ஓரிரு சொற்கள்.ஆபாசமாக உடலை காட்டி நடித்து கண்டவரையும் கட்டிப்பிடித்து ஆடி காசு பார்க்கும் உங்களை போன்ற நடிகர் நடிகைகளை விட உழைத்துப் பிழைக்கும் தொழிலாளர்கள் ஆயிரம் மடங்கு மேலானவர்கள்.


4 comments:

  1. உடனே கருத்தினை பதிவாக இட்டமைக்கு நன்றி.

    உழைக்கும் மக்களை இழிவுபடுத்தும் இது போன்ற நிகழ்ச்சிகள் தற்போது அதிகரித்து வருகிறது.

    இவற்றையும், சொர்ணமால்யா போன்ற பதர்களையும் அம்பலப்படுத்த வேண்டியது அவசியம் இன்று.

    இந்த நிகழ்ச்சியை போல கோடியின் குரல் என்ற நிகழ்ச்சியை பற்றிய பதிவு இதோ...

    http://athikalai.wordpress.com/2011/04/19/jaya-tv-kodiyin-kural/

    ReplyDelete
  2. சினிமா உலக மக்களுக்குப் பொழுது போக்கு. தமிழர்கட்கோ அதுவே வாழ்க்கையின் பெரும் பகுதி என்று ஆகி விட்டது.தொல்லைக் காட்சியின் ஆதிக்கம் தமிழகத்தை அழித்துக் கொண்டிருக்கிறது.

    ReplyDelete
  3. சொர்ணமால்யாவின் பேச்சு ஆணவமான்து மட்டுமல்ல,நாகரீகமற்றது என்று திருந்தும் இவ்வகை ஜன்மங்கள்

    ReplyDelete