Saturday, May 14, 2011

செயலலிதா ஆட்சி வேறு எப்படி இருக்கும்.மூன்றாம் இருண்ட காலம்தான்.

விளையும் பயிர் முளையிலேயே தெரிகிறது.செயா தமிழ் மக்கள் மீதான முதல் தாக்குதலை தொடுத்து விட்டார்.

கருணாநிதி ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காக புதிய தலைமை செயலக வளாகத்தை புறக்கணித்து விட்டு மீண்டும் புனித சார்ச் கோட்டைக்கே தலைமை செயலகத்தை மாற்ற செயா ஆணையிட்டுள்ளார் .சரியோ தவறோ கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தை கொட்டி புதிய தலைமை செயலக வளாகம் கட்டப்பட்டு விட்டது.பல கோடி உருவாக்கள் செலவில் அலுவலகங்களும் மாற்றப்பட்டு விட்டன.குளிர் பதன வசதிகளுடன் சட்டப்பேரவை கூட்டங்கள் நடத்துவதற்கான வசதிகளும் செய்யப்பட்டு பேரவை கூட்டங்களும் நடத்தப்பட்டு விட்டன. இந்த நிலையில் பல கோடி உருவாக்கள் மக்கள் வரிப்பணத்தை பாழாக்கி மீண்டும் தலைமை செயலகத்தையும் சட்டப் பேரவை கூடுமிடத்தையும் இப்போது மாற்ற வேண்டிய தேவை என்ன வந்துவிட்டது,

செயாவின் அகந்தை [ego] மனப்பான்மையும் ''வாசுது'' மீது அவர் கொண்டுள்ள மூடநம்பிக்கையும் ஆட்சியை பிடித்த மறுநாளே மக்கள் வரிப்பணம் பல கோடிகளை பாழாக்குகிறது. இது போன்ற வீணடிப்புகளின் சுமை நாளை மக்களின் தலை மீதுதானே சுமத்தப்படும்.

இந்த சமயத்தில் செயலலிதாவுக்கு நாம் கோரிக்கை ஒன்றை விடுப்போம். புதிய தலைமை செயலக வளாகம் உங்களுக்கு தேவையில்லை என்றால் அதனை சென்னையில் மாட்டு தொழுவங்கள் போன்ற நிலையில் இருக்கும் சேரிகளில் வாழ்வோருக்கும் நடைபாதையில் வாழும் வீடற்ற மக்களுக்கும் இலவச வீடுகளாக கொடுத்து விடுங்கள்.சட்டப்பேரவை கூடங்களை மாநகராட்சி பள்ளிகள் நடத்த கொடுத்து விடுங்கள்.

2 comments:

  1. நியாயமான கோபம்.
    ஆனால் தமிழ்மணத்தில் எடுபடாது.
    ஏனென்றால் அவர் எப்படியும் தமிழீழத்தை மீட்டித்தந்துவிடுவாராம்.பொறுத்திருந்து பார்க்கலாம்.

    ReplyDelete
  2. நன்றி,காமராச்.
    இந்த ஊர் இன்னுமா கைப்புள்ளைய நம்பிக்கிட்டுருக்கு.செயா ஈழம் வாங்கி கொடுப்பார் என்று இன்னுமா நம்புகிறார்கள்.நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு பொறுக்குவதற்காக ஈழ ஆதரவு நாடகம் ஆடிய செயா தேர்தலில் தோற்ற பிறகு ''ஈழமா''கிலோ என்ன விலை என்று கேட்காத குறையாக ஈழம் குறித்து மவுனம் சாதிக்கிறார்.ஈழம் குறித்த செயாவின் நிலைப்பாட்டை அவரது வரலாற்று சிறப்புமிக்க இந்த பொன்மொழியிலிருந்து அறிந்து கொள்ளலாமே.''போர் என்றால் அப்பாவி மக்களும் சாகத்தான் செய்வார்கள்''.

    ReplyDelete