Friday, May 20, 2011

சாதி,மத வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு.வரவேற்கத்தக்கது.

2011 ஆம் ஆண்டில் நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு சாதி,மத வாரியாக நடத்தப்படும் என தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை நடுவண் அமைச்சர் அம்பிகா சோனி அறிவித்துள்ளார்.இது தொடர்பாக நடுவண் அமைச்சரவை எடுத்துள்ள முடிவை செய்தியாளர்களிடம் அறிவித்த அமைச்சர் மக்கள் தொகை கணக்கெடுக்கப் படும்போது வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் மக்களின் எண்ணிக்கை,குடிமகன்களின் பொருளாதார,கல்வி,சாதி,மதம் முதலான அனைத்து விவரங்களும் சேகரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

சமூக நீதி ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாதி,மத வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு இப்போது நிறைவேறுகிறது.இதன்மூலம் சாதி சங்கங்கள் மனம் போன போக்கில் சொல்லிவந்த அவர்கள் சாதியினர் குறித்த எண்ணிக்கையின் உண்மை நிலவரம் இப்போது தெரிந்து விடும். [சாதி சங்கங்கள் சொல்லிவரும் கணக்குப்படி பார்த்தால் தமிழ்நாட்டின் மக்கள் தொகை 15 கோடியைத் தாண்டும்] இக்கணக்கெடுப்பின் மூலம் ஒவ்வொரு சமூகத்தின் வளர்ந்த நிலையோ,பின்தங்கிய நிலையோ துல்லியமாக தெரிய வாய்ப்பிருப்பதால் பின்தங்கியோரை கைதூக்கி விடுவதற்கான திட்டங்கள் வகுத்து செயல்பட ஏதுவாக இருக்கும். 

சமூக ரீதியாக பின்தங்கியோருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடுக்கு எதிராக நஞ்சு கக்கும் பார்ப்பனிய கள்ளப்பரப்புரையை எதிர்கொள்ள சமூக நீதி ஆதரவாளர்களுக்கு இக்கணக்கெடுப்பு பல ஆயுதங்களை வழங்கும். இடஒதுக்கீடு அளிக்கப்பட்டாலும் தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மக்கள் பார்ப்பன,மேல்சாதியினருடன் ஒப்பிடுகையில் எந்த அளவுக்கு பின்தங்கியுள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும். ஒட்டு மொத்த மக்கள் தொகையில் கணிசமான பகுதியினரை வருமின் கோரப்பிடியில் சிக்க வைத்துவிட்டு நாடு முன்னேறும் என எதிர்பார்ப்பது வண்டிக்கு பின்னல் குதிரையை கட்டுவதற்கு ஒப்பானது.அந்த வண்டி ஓடவே ஓடாது.அந்த நாடு முன்னேறவே முடியாது.ஆகவே இடஒதுக்கீடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப்படும் சலுகையல்ல அது அவர்களின் உரிமை என்பதை உரத்து சொல்ல வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தும்.

மேலும் இந்தியாவில் இசுலாமிய மக்கள் தொகை வெகுவேகமாக பெருகி வருகிறது என்ற சங் பரிவார் கும்பலின் கள்ளப்பரப்புரையையும் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு முறியடிக்கும் என எதிர் பார்க்கலாம். 

வகுப்புவாத வெறியர்களின் கள்ளப்பரப்புரை எப்படி உள்ளது பாருங்கள்.
முசுலிம்கள் நான்கு மனைவி வரை மணம் முடித்து ஏராளமாக குழந்தை பெற்று கொள்கிறார்கள்.ஒரு மனைவி என்றாலும் நிறைய குழந்தைகள் பெறுகிறார்கள்.

எதார்த்த வாழ்வில் நாம் சந்திக்கும் இசுலாமியர்கள் இப்படியா இருக்கிறார்கள் என உண்மை நிலவரத்தை அறிவின் துணைகொண்டு ஆராய்ந்து பார்க்காமல் இந்த கள்ளப்பரப்புரையை அப்படியே நம்பும் மடமையும் ஒழியலாம்.

ஆக மொத்தத்தில் சாதி,மத வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு.வரவேற்கத்தக்கது.வரவேற்போம். கணக்கெடுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்.


2 comments:

  1. சாதி மத ரீதியான கணக்கெடுப்பு நிச்சயம் தேவையான ஒன்று தான். முதலில் இட ஒதுக்கீடு செய்வதற்கு அது உதவும், மற்றொன்று மத ரீதியான பொய்மைகளை உடைக்க்ச் செய்யும். இஸ்லாமியரில் அனைவரும் அதிக பிள்ளைப் பேறுடையவராய் எனக்குப் படவில்லை. ஆனால் இஸ்லாமியர்களில் படிப்பறிவு, வசதியற்ற சிலரே அப்படி செய்கின்றார்கள்..... இந்துக்களில் கூட உபி, பிகார் போன்ற மாநிலங்களில் பிறப்பு வீதம் கட்டுப்பாடில்லாமல் போய் கொண்டிருக்கின்றது. அதே மாநிலத்தில் முஸ்லிம்களிலும் இதே நிலை தான்.

    இதற்கு காரணம் கல்வியறிவு, வசதி இல்லாமல் இருப்பதும். அரசின மெத்தனங்களுமே ஆகும்.

    ReplyDelete
  2. நன்றி இக்பால் செல்வன்,
    சரியாக சொன்னீர்கள்.மக்கள் தொகை பெருக்கத்துடன் நேரடியான தொடர்பு கொண்டவை கல்வியறிவின்மையும் சமூக ரீதியான பின்தங்கிய நிலையும்தான்.மதத்திற்கும் மக்கள் தொகைக்கும் முடிச்சு போடுவது கெட்ட உள்நோக்கம் கொண்டதே.

    ReplyDelete