Monday, November 7, 2011

தமிழினத்தின் புதிய விபீடணன் அப்துல் கலாம்.

மரங்களை வெட்டிச்சாய்க்கும் கோடரியின் காம்பு ஒரு மரத்தால் ஆனது எனபது எத்தகைய குரூரமான உண்மை.அதே வகையில் கூடங்குளம் அணு உலையை மூடி தங்கள் உயிரையும் வருங்கால சந்ததியினரின் உயிரையும் பாதுகாக்க கோரி போராடும் தமிழக மக்களை ஏய்த்து அணு உலையை இயங்க வைக்க இந்திய ஏகாதிபத்தியம் செய்து வரும் பல்வேறு நரித்தந்திரங்களில் ஒன்றாக இப்போது முன்னாள் அரசவை கோமாளி அப்துல் கலாம் களமிறக்கப் பட்டுள்ளார்.


ஆம்,நண்பர்களே,சாக்கடையை சீர்படுத்தி கொசுவை கூட ஒழிக்க வக்கற்ற இந்தியா 2020 -ல் வல்லரசாக உருவெடுக்கும் என பிதற்றி வருபவரை ''கோமாளி''என சொல்லாமல் வேறு எப்படி அழைப்பது.

இந்த அதிமேதாவி நேற்று காலை கூடங்குளம் அணு உலையை பார்வையிட்டு அங்கு செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை ''ஆய்வு'' செய்தாராம்.அரை நாளிலேயே தமது ''ஆய்வை''நிறைவு செய்த கலாம் உடனடியாக செய்தியாளர்களை சந்தித்து ''கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது''என சான்றிதழ் கொடுத்துவிட்டு வந்த வேலை முடிந்தது என கிளம்பி விட்டார்.

இந்தியாவின்  அணு ஆயுத உற்பத்தியிலும் அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கவல்ல ஏவுகணைகளை  உருவாக்குவதிலும் பெரும்பங்கு வகித்த,அணு ஆற்றலை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதாக நாடகமாடி உண்மையில் அணு குண்டுகளை செய்து குவிக்கும் இந்திய அரசின் அரசுத்தலைவராக இருந்த ஒருவர்,அப்பட்டமான ஒரு அணு ஆயுத வெறியர்  வேறு எப்படி சொல்வார்.அவரது கூடங்குளம் வருகைக்கு முன்பே அவரது ''சான்றிதழ்'' எப்படி இருக்கும் எனபது நாம் அனைவரும் அறிந்ததே.


அணு உலைகள் மின் உறபத்திக்காகவா,அணு குண்டு உறபத்திக்காகவா.

அணு உலைகள் பெரும் பொருட்செலவில் நிறுவப்படுவது மின் உற்பத்திக்காக என்று நம்மை நம்பச் சொல்கின்றது இந்திய ஆளும் கும்பல்.ஒரு எளிய கேள்வி இந்த பித்தலாட்டத்தை தோலுரித்து விடும். இரண்டு முறை அணு குண்டுகளை வெடித்து சோதனை செய்துள்ளது இந்திய அரசு.சோதனை நடந்தது தார் பாலைவனத்தில் பொக்ரான் என்ற இடத்தில் என்று நமக்கு தெளிவாக அறிவித்த அரசு அந்த அணு குண்டுகளை எங்கு,எப்போது செய்தோம் என்பதை தெரிவிக்கவில்லையே. ஏன். எங்கே செய்திருப்பார்கள் எனபது ஊரறிந்த கமுக்கம்.வேறு எங்கே செய்ய முடியும்.கலாம் ஏற்றிப் போற்றும் அணு உலைகளில்தான். மின் உற்பத்தி என்ற போர்வையில் அணு உலைகள் அணு குண்டு செய்யவே பயன்படுத்தப் படுகின்றன என்பது இதிலிருந்தே தெளிவாகவில்லையா.


அணு உலையின் முதன்மை விளைபொருள் அணுகுண்டே.பக்க விளைபொருளே மின்சாரம்.


அணு உலைகளின் முதன்மையான விளைபொருள் எதுவென புரிந்து கொள்ள அவற்றின் செயல்பாட்டை சுருக்கமாக பார்ப்போம்.  இயற்கையாக கிடைக்கும் யுரேனிய தாதுவை அணு உலைகளில் செறிவூட்டி யுரேனிய  அணுக்களை அணுப்பிளவு [fission] செய்வதன் மூலம் .ப்ளுட்டோனியம்  உற்பத்தி செய்யப்படுகிறது.இந்த புளுட்டோனியம்தான் அனுகுண்டுகளுக்கான மூலப்பொருள்.

இந்த மூலப்பொருளை உருவாக்குவதற்கான அணுப்பிளவின் போது மிகுந்த வெப்பம் வெளிப்படுகிறது.அதை தணிக்காவிட்டால் யுரேனியம் வைக்கப்பட்டிருக்கும் கொள்கலனை உருக்கி பெரும் கதிரியக்க விபத்தை ஏற்படுத்திவிடும்இதுதான் புக்குசிமாவில் நடந்தது. வெப்பத்தை தணிப்பதற்காக அந்த கொள்கலனில் மீது குளிர்ந்த நீர் பாய்ச்சப் படுகிறது.அந்த நீர் வெப்பத்தினால் நீராவியாக மாறி வெளியேறும் பாதையில் மின்னாக்கியின் சுழல் சக்கரங்களை வைத்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இப்படியாக அணுகுண்டு செய்வதற்கான ஏற்பாட்டையே மின் உற்பத்தி என மாய்மாலம் செய்கிறது இந்திய அரசு.

கூடங்குளம் அணுஉலை பாதுகாப்பானதா.

கூடங்குளம் என்றில்லை,உலகின் எந்த ஒரு அணு உலையும் பாதுகாப்பானது அல்ல.இதை அமெரிக்காவின் மூன்று மைல் விபத்தும், ருசியாவின் செர்நோபில் விபத்தும் காட்டியுள்ளன.எல்லாவற்றுக்கும் மேலாக சப்பானின் புகுசிமா விபத்து அணு உலைகள் பாதுகாப்பு குறித்த அத்தனை பிரமைகளையும் தகர்த்து விட்டது.

கூடங்குளம் பகுதிக்கு நிலநடுக்கம்,ஆழிப்பேரலை போன்ற அபாயங்கள் குறைவு என திருவாய் மலர்ந்துள்ளார் நவீன விபீடணன் கலாம்.மேலும் அணுக்கழிவுகள் கடலில் கொட்டப்படாது,அவை ஆழ குழி தோண்டி புதைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ள அவர் ஒரு உண்மையை சேர்த்து சொல்லியிருந்தால் அவரது அறிவு நாணயத்தை பாராட்டலாம்.அந்த கழிவுகள் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு கதிரியக்கத்தை வெளிப்படுத்தும் என்பதை அவர் சொல்லாதது ஏன்.[சொல்லியிருந்தால் மக்கள் அவர் முகத்தில் காறித் துப்பியிருப்பார்கள்]

வெறும் முப்பது ஆண்டுகள் சில ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக பல்லாயிரம் ஆண்டுகள் கதிரியக்க அபாயத்தை தமிழக மக்கள் சுமக்க வேண்டுமா.இந்த ஐம்பதாயிரம் ஆண்டுகளில் ஒரு முறை கூட நிலநடுக்கமோ,ஆழிப்பேரலையோ கூடங்குளம் பகுதியை தாக்காது என்று எந்த முட்டாளும் உறுதி அளிக்கமாட்டான்.ஆனாலும் வாய்ப்பு குறைவு என கூறும் கலாமை எப்படி அழைப்பது என நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.அப்படி ஒரு விபத்து ஏற்பட்டு ஆழ்குழி பெட்டகம் பாதிக்கப்படுமானால் தமிழக மக்களின் கதி என்ன எண்ணிப் பார்க்கும் மனசாட்சியுள்ள எவரும் கூடங்குளம் அணு உலையை ஆதரிக்க மாட்டார்கள்.

பெரும் முதலீடு செய்தபின் கூடங்குளம் அணு உலையை மூடக் கோருவது நியாயமா.

ஒரு நாட்டின் இறையாண்மை எனபது அந்த நாட்டின் மக்களிடமிருந்துதான் பிறக்கிறது.அந்த இறையாண்மையின் பெயரால்தான் இந்திய அரசு கொள்கை மற்றும்  திட்ட முடிவுகளை எடுக்கிறது.அந்த வகையில் தமிழ்நாட்டுக்கு என்ன தேவை எது தேவையில்லை என முடிவு செய்யும் உரிமை தமிழக மக்களுக்கு உண்டு. மேலும் அணு உலை குறித்த கருத்தாக்கங்களை புகுசிமாவுக்கு முன், புகுசிமாவுக்கு பின் என பிரித்து பார்க்கும் அளவுக்கு பேரழிவை ஏற்படுத்தி இருக்கிறது அந்த விபத்து.ஆகவே கூடுதல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள இன்றைய நிலையில் கூடங்குளம் அணு உலையை தமிழக மக்கள் மூடக் கோருவது நியாயமானதுதான்.மக்களின் உயிரை விட பணம் பெரிதா என்ன.

அணு ஆயுதங்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்து விடுமா.

அணு ஆயுதங்கள் இரண்டாம் உலகப் போருக்கு பின் பயன்படுத்தப் பட்டதில்லை.பெரும் நாசம் விளைவிக்கும் அவற்றை பயன்படுத்தவும் மனித சமூகம் அனுமதிக்காது.நாய் பெற்ற தெங்கம் பழத்தை போல உருட்டி கொண்டிருப்பதற்காக ஏன் அணு குண்டுகளை செய்ய வேண்டும்.அணுகுண்டு வைத்திருந்தால் எதிரி நாடுகள் நம் மீது தாக்குதல் தொடுக்க அஞ்சும் என்பதும் கற்பனைதான்.1998 பொக்ரான் அணுகுண்டு வெடிப்பு சோதனைக்கு பின்னர்தான் 1999 ல் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காசுமீர் பகுதியின் கார்கில் மலைக் குன்றுகளை பாக்கிசுத்தான் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமித்தது.அண்டைநாடுகளுடன் சமாதான சக வாழ்வை கடைப்பிடிப்பதுதான் பாதுகாப்பை உறுதி செய்யும்.

ஆகவே இந்தியா வல்லரசு கனவில் அணுஆயுதங்களை செய்து குவிக்க தமிழகத்தை சுடுகாடாக்குவதை அனுமதிக்க முடியாது.

கூடங்குளம் மக்களுக்கு ''லஞ்சம்''கொடுத்து ஏய்க்க முயல்கிறார் கலாம்.

கூடங்குளம் உலையின் பாதுகாப்பு ஏற்பாடுகளை ''ஆய்வு''செய்ய வந்த கலாம் தமக்கு தொடர்பேதும் இல்லாத வகையில் அப்பகுதியில் செய்ய வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகளை பட்டியலிட்டுள்ளார்.குடிநீர் வசதி,பாசன வசதி,நடுவண் பள்ளிக்கூடங்கள்  நிறுவுவது என மக்களுக்கு ''நல்லது'' செய்வோம் என வாக்கு கேட்டு வரும் அரசியல்வாதி போல் பேசுகிறார்.அதாவது கூடங்குளம் அணு உலையை செயல் பட அனுமதித்தால் இவையெல்லாம் உங்களுக்கு கிடைக்கும்;அனுமதிக்க மறுத்தால் இவையெல்லாம் கிடைக்காது என பசப்பும் மொழியல்லவா இவை.

இதற்கு ஒரே வரியில் நாம் விடையளிப்போம்.அய்யா,அறிவாளியே,இந்த வளர்ச்சி பணிகள் எல்லாம் மக்களுக்கு செய்து தர வேண்டியது ஒரு மக்கள் நல அரசின் கடமையல்லவா.மக்களை எப்போது வேண்டுமானாலும் காவு வாங்க கூடிய ஒரு திட்டத்தை அனுமதித்தால்தான் அவை கிடைக்கும் எனபது கடைந்தெடுத்த பித்தலாட்டமில்லையா.

ஆகவே கலாம் என்ன யாராக இருந்தாலும் நவீன கால விபீடணர்களை புறக்கணிப்போம். தமிழினம் உயிர் பிழைத்திருக்க போராடும் கூடங்குளம் மக்களின் போராட்டத்திற்கு தோள் கொடுப்போம்.


7 comments:

 1. why you ppl are so upset with koodankulam? Why don't you do the samething against kalpakkam, baba centre etc? if you stop, koodankulam, what you will do if tsunami comes to kalpakkam?

  I am against atomic power. but I am also against foolish arguments like this.

  Kalam worked in atomic and rocket physics. He will think in his point of view. what the hell you ppl were doing when he became the president of India. You should have opposed for a man from atomic physics. You should be very happy with a president like pradipa.

  ReplyDelete
 2. பண்டு

  \\why you ppl are so upset with koodankulam?//
  மக்கள் மீதான அக்கறைதான் காரணம்.

  \\Why don't you do the samething against kalpakkam, baba centre etc? if you stop, koodankulam, what you will do if tsunami comes to kalpakkam?//
  கட்டுரையை முழுமையாக படிக்காமலேயே மறுமொழி எழுத உட்கார்ந்து விடுவீர்களோ. கட்டுரையிலேயே இதற்கு விடை உள்ளது.பார்க்க

  \\கூடங்குளம் என்றில்லை,உலகின் எந்த ஒரு அணு உலையும் பாதுகாப்பானது அல்ல.இதை அமெரிக்காவின் மூன்று மைல் விபத்தும், ருசியாவின் செர்நோபில் விபத்தும் காட்டியுள்ளன.எல்லாவற்றுக்கும் மேலாக சப்பானின் புகுசிமா விபத்து அணு உலைகள் பாதுகாப்பு குறித்த அத்தனை பிரமைகளையும் தகர்த்து விட்டது.//

  \\I am against atomic power. but I am also against foolish arguments like this.//
  கட்டுரை எந்த வகையில் எப்படி முட்டாள்தனமாக உள்ளது என எடுத்துக்காட்டி விட்டு உங்கள் நாட்டாமை தீர்ப்பை சொல்லுங்கள்.அப்போதுதான் இப்படி பொத்தாம் பொதுவாக தீர்ப்பளிப்பது முட்டாள்தனமா,கட்டுரை முட்டாள்தனமாக உள்ளதா என்பதை படிப்பவர்கள் முடிவு செய்ய முடியும்.

  \\Kalam worked in atomic and rocket physics. He will think in his point of view. what the hell you ppl were doing when he became the president of India. You should have opposed for a man from atomic physics. //

  எமக்கும் அணுவியற்பியல் அறிவியலுக்கும் பகை ஏதுமில்லை.அந்த துறையிலிருந்து யார் பதவிக்கு வந்தாலும் எதிர்க்க வேண்டும் என்று அவசியம் ஏதுமில்லை. அறிவியலை எதற்காக பயன்படுத்துகிறார்கள் என்பதை வைத்தே ஆதரவும்,எதிர்ப்பும் இருக்க முடியும்.மற்றபடி அப்துல் கலாமுக்கும் எமக்கும் வாய்க்கால்,வரப்பு சண்டை ஏதுமில்லை.

  ReplyDelete
 3. Indeed, I am very happy to go through your write-up. It is very well done. My hearty congrats to you! Kalam may be a renowned nuclear scientist. But he is not a person who echoes the genuine anguish of the struggling majority of our nation, though he was one among them in his early days. While talking about the prosperity of the nation, whose prosperity he has in mind? Should the generations to come suffer for the prosperity of a few?!
  As you have rightly pointed out, Kalam has exceeded his limit, when he talked about the welfare measures to be done to the people around Koodangulam. Let him stick his comments to his technical know how of nuclear energy alone.
  A day will come when Mr. Kalam regrets for having lent his mind in the process of nuclear technology, both bomb & energy - a killing force of ordinary masses.

  ReplyDelete
 4. அணுமின்சாரக் கட்டுக்கதைகளும் கூடங்குளமும்

  http://arulgreen.blogspot.com/2011/11/blog-post.html

  ReplyDelete
 5. அணுமின்சாரக் கட்டுக்கதைகளும் கூடங்குளமும்

  http://arulgreen.blogspot.com/2011/11/blog-post.html

  ReplyDelete
 6. தமிழர் சிந்தனை தளத்தில் நல்ல பதிவுகளை வழங்கி வருகிறீர்கள் வாழ்த்துக்கள்.
  தமிழர் போராட்டங்களை இழிவுபடுத்தும் தினமலர்! http://www.sinthikkavum.net/2011/11/blog-post_14.html

  ReplyDelete
 7. தமிழர் சிந்தனை தளத்தில் நல்ல பதிவுகளை வழங்கி வருகிறீர்கள் வாழ்த்துக்கள்.
  தமிழர் போராட்டங்களை இழிவுபடுத்தும் தினமலர்! http://www.sinthikkavum.net/2011/11/blog-post_14.html

  ReplyDelete