Tuesday, November 29, 2011

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு.பகற் கொள்ளைக்கு பட்டு கம்பள வரவேற்பு.



காலம்.பா.ச.க.ஆட்சிக்காலம்.
இடம். மாநிலங்களவை.


சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது குறித்து விவாதம் தூள் பறக்கிறது.பா.ச க,அரசு அந்நிய முதலீட்டை அனுமதிக்க எத்தணிக்கிறது.தாடியும் தலைப்பாகையுமாக ஒரு முதியவர் அரசின் கருத்தை கடுமையாக எதிர்த்து பேசுகிறார். நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் பா.ச.க அரசு தனது முயற்சியை கை விட்டு பின்வாங்குகிறது.


காலம்.2011  
இடம்.அதே நாடாளுமன்ற வளாகம்.


சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது என காங்கிரசு கயவாளி கும்பல் முடிவெடுத்ததை நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்க்கிறது பா.ச.க. அதே தாடிக்காரர் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளை சமாதனப்படுத்த அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்படும் என அறிவிக்கிறார்.


ஆம்.நண்பர்களே அந்த தாடிக்காரர் நமது முதன்மர் மன்மோகன்தான்.இன்று எதிர்ப்பதாக நாடகமாடும் பா.ச.க சந்தர்ப்பம் கிடைத்தால் எத்ததைய துரோகத்துக்கும் தயங்காது என்பதை அதன் கடந்த கால ஆட்சியே சான்றாக இருக்கிறதல்லவா.எப்பேர்ப்பட்ட நயவஞ்சகர்களிடம் நாடு சிக்கிக் கொண்டுள்ளது,பார்த்தீர்களா.


நாட்டை ஏகாதிபத்திய நாடுகளிடம் அடிமையாக்கி,பல கோடி மக்களின் வாழ்வாதாரத்தை பறித்து சூறையாடி பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் கொள்ளையடிக்க அடிகோலும் இந்த சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு எனும் ஆபத்தை அரசியல் கட்சிகளை நம்பியிராமல் மக்களே போராடி வீழ்த்த அணி திரள வேண்டிய தருணமிது.

1 comment:

  1. சகோதரா
    உங்கள் பதிவில் தமிழ் எழுத்துரு சிறிதாகவும் பெரிதாகவும் மாறி மாறி வருகிறது

    மொத்தமாக செலக்ட் செய்து மீடியம் நடுத்தர அளவு கொண்டு வாருங்கள்

    ReplyDelete