Tuesday, January 29, 2013

விசுவரூபம்.கலையல்ல,களையப்பட வேண்டிய நச்சுக் களை.

விசுவரூபம் திரைப்படம் வெளிவரும் முன்னரே அதற்கு எதிர்ப்புகள் எழுந்தன.படத்தை பார்க்கும் முன்பே அது குறித்து தீர்ப்பளிக்க நீங்கள் யார் என அதிமேதாவிகள் துள்ளிக் குதித்தனர்.திரைப்படப் பெயர் அரபு மொழி வடிவத்தில் எழுதப்பட்டிருந்ததும் விளம்பரமாக வெளியிடப்பட்ட முன்னோட்ட படமும் [Trailor ] படம் குறித்து ஓரளவுக்கு முன்னறிவிப்பு செய்திருந்தன.அதனிலும் மேலாக கமல் என்ற பார்ப்பன பாசிச வெறி பிடித்த ''கொலைஞன்'' இடமிருந்து மக்கள் நலனுக்கான கருத்துக்களை எடுத்துச் சொல்லும்  படத்தையா எதிர்பார்க்க முடியும்.

கமல் காசனை ''பார்ப்பன பாசிச வெறியன்'' என நாம் சொல்வது ஏதோ போகிற போக்கில் ஆத்திரத்தில் அள்ளி வீசும் அவதூறு அல்ல.அவரது சொல்,செயல்களின் அடிப்படையிலேயே நாம் அவ்வாறு வரையறுக்கிறோம்.

உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் கமல் மிகவும் உருக்கமான குரலில் பேசுவார்.

''நாம் எல்லோருமே வயது வந்தவர்கள்.இவர்கள் கர்ப்பிணி பெண்ணின் பிறப்புறுப்பு வழியே கைவிட்டு குழந்தையை வெளியே எடுத்து வெட்டிக் கொன்று தீயில் தூக்கி வீசினார்கள்.இவர்களை கொல்ல கூடாது என்று சொல்கிறீர்களா'' 

நண்பர்களே,மறந்திருக்க மாட்டீர்கள்.இந்த நிகழ்வு எங்கே, எப்போது நடந்தது.குசராத் கலவரத்தில் பார்ப்பனிய இந்து மத வெறி பயங்கரவாதிகள் நடத்திய பச்சை படுகொலைகளில் ஒன்றுதானே  இது.அப்படியானால் கமல் யாரை தூக்கி இருக்க வேண்டும்.நாங்கள்தான் முசுலிம்களை கொன்றோம்,அவர்கள் வீட்டு பெண்களை வல்லுறவு கொண்டு சிதைத்தோம் என தெகல்கா செய்தியாளர்களிடம் பெருமையாக சொன்னார்களே அந்த இந்து மத வெறியர்களை அல்லவா தூக்கி இருக்க வேண்டும்.அந்த வெறி நாய்களை ஏவி விட்ட மோடி கும்பலை அல்லவா தூக்கி இருக்க வேண்டும்.முசுலிம் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட அநீதியை ''முசுலிம் தீவிரவாதி''கள் நடத்தியதாக சொல்வது மோசடி இல்லையா.

அந்த பேச்சை கேட்கும் காவல்துறை கட்டுப்பாட்டு அறையே மயான அமைதியில் மூழ்கிப் போகும்.அந்த அறையில் அமர்ந்து கமலின் இணைய வழி கைப்பேசி பேச்சை கண்காணித்து பின் தொடரும் கணினி வல்லுநரான இளைஞன் அந்த சமயத்தில் கமல் எந்த இடத்திலிருந்து பேசுகிறார் என்பதை கண்டு பிடித்திருப்பான்.ஆனால் அந்த பேச்சை கேட்ட பின் கமலை காட்டிக் கொடுக்க மறுத்து விடுவான்.போலி மோதல்கள் நடத்தி அப்பாவி முசுலிம்களை கொன்றொழிக்கும் கயமையை ஆதரிக்கும் மடமையை சமூகத்தின் மீது திணிக்கும் பாசிச போக்கு இல்லையா இது.

இப்போது விசுவரூபம் திரைப்படத்தை எதிர்ப்பவர்கள் கலாசார தீவிரவாதிகள் என்றும் நாட்டுப் பற்று இல்லாதவர்கள் என்றும் நஞ்சு கக்குகிறது இந்த ஆரிய பாம்பு. 

அடி செருப்பால, சமூகத்தின் ஒரு பிரிவு மக்களை இழிவு படுத்தி அவர்கள் மீது பகைமையை விதைக்கும் இவரது நயவஞ்சகத்தை தோலுரித்து காட்டினால் அது நாட்டுக்கே எதிரானதா,இந்த நாடு என்ன கமல் குத்தகைக்கு எடுத்திருக்கும் திரைப்பட கொட்டகையா.இப்படிப்பட்ட பாசிச போக்கில் சிந்திக்கும் இவரது மூளைதான் கலாசார தீவிரவாதத்தின் பிறப்பிடம்.கலை என்ற பெயரில் மக்களிடையே கொலைவெறியை தூண்டும் இவர்தான் கலாசார தீவிரவாதி.

அதனால்தான் சொல்கிறோம் கமல காசன் ஒரு அப்பட்டமான ''பார்ப்பன பாசிச வெறியன்''. 

இப்போது விசுவரூபம் திரைப்படத்துக்கு வருவோம்.

அந்த திரைப்படத்தை இதுவரை பார்க்கவில்லை.பார்த்தவர்கள் எழுதியதையும்  பேசியதையும் வைத்தே அது எப்பேர்ப்பட்ட மோசடியான படைப்பு என புரிந்து கொள்ள முடிகிறது.

கமல் பார்ப்பனன் வேடமிட்ட முசுலிமாக நடித்துள்ளார்.தீவிரவாதியாம். அமெரிக்காவின் ஆப்கான் ஆக்கிரமிப்பு பற்றிய படம் என்றாலும் அதில் அமெரிக்காவின் உலக மேலாதிக்க அரசியல் குறித்தும்,அது எப்படி அமெரிக்க பெரு முதலாளிகளின் நலனுக்கானது எனபது குறித்தும், அமெரிக்கா நடத்தும் போர்கள் எண்ணெய் திருடுவதற்கானது எனபது குறித்தும் ஒரு வரி கூட உரையாடல் இருக்காது என்பதை படத்தை பார்க்காமலே திண்ணமாக கூற முடியும்.''பூலோக சொர்க்கம்'' என்று அமெரிக்காவை கொண்டாடும் அம்பிகளின் அண்ணன், மேற்குலக ஏகாதிபத்தியங்களின் அடிமையான பார்ப்பனியத்தின் பிரதிநிதி கமல் அப்படியெல்லாம் காட்சி அமைப்பாரா என்ன.

படத்தில் வரும் தலிபான் தலைவர் தமிழில் பேசுவதை கண்டு ஆச்சரியப்படும் கமலிடம் தலிபான் தலைவர் தான் ஓராண்டு காலம் கோவையிலும் மதுரையிலும் சுற்றித் திரிந்ததாக சொல்கிறார்.பூனைக் குட்டி வெளியே வருகிறது பாருங்கள்.தலிபான்கள் கோவைக்கும் மதுரைக்கும் இன்ப சுற்றுலாவுக்கா வந்திருப்பார்கள்.அப்படியானால் கமல் என்ன சொல்ல வருகிறார். ஆப்கான் தீவிரவாதிகள் தமிழக முசுலிம்களுடன் தொடர்புகள் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள் என்பதுதானே. இப்படியான அவதூறு கருத்தை மக்கள் மனதில் விதைப்பதை நாம் அனுமதிக்கலாமா.

படத்தில் ஒரு காட்சியில் தலிபான் தலைவர் சொல்கிறார். அமெரிக்கர்கள் நல்லவர்கள்,பெண்களையும் குழந்தைகளையும் கொல்ல மாட்டார்கள்.எப்பேர்பட்ட மோசடி.ஆப்கானிலும்,ஈராக்கிலும் இலட்சக்கணக்கில் அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் அமெரிக்க கயவாளிகளுக்கு கொஞ்சமும் வெட்கப் படாமல் நற்சான்றிதழ் வழங்கும்  கமலுக்கு இந்த ஆண்டு ஆசுகார் விருது கிடைக்கலாம்.

படம் முழுவதும் தீவிரவாதிகள் இசுலாமிய புனித நூலான குரானை தூக்கிக் கொண்டு அலைகிறார்கள்.மக்களை கொல்லும் கயவர்கள் அந்த புனித நூலிலிருந்துதான் தமக்கான உத்வேகத்தை பெறுவதாக காட்டுவது அந்த மதத்தையே இழிவு படுத்துவது ஆகாதா.

சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக தலிபான்களை தோற்றுவித்ததும் அவர்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் கொடுத்து மதத்தின் பெயரால் போரிட செய்ததும் அமெரிக்கா என்ற உண்மையை மறைத்து, பாலசுதீனம் உள்ளிட்டு உலகெங்கும் முசுலிம் மக்கள் மீது அமெரிக்க இசுரேல் கயவாளிகள் நடத்தும் கொலை வெறியாட்டத்துக்கு எதிர் வினையாக தோன்றியதுதான் அல்காயிதா,தலிபான் முதலான தீவிரவாத இயக்கங்கள் என்ற உண்மையை மறைத்து தீவிரவாதத்துக்கு காரணம் அவர்கள் மதம்தான் என்று காட்டுவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.இந்த மோசடியை நியாய உள்ளம் கொண்டோர் அனுமதிக்க முடியுமா.

நிச்சயம் அனுமதிக்க முடியாது.ஆகவே முசுலிம் மக்கள் மீது அநிநாயமாக பழி போட்டு  பிற சமூக மக்களிடம் பகைமையை மூட்டுவதன் மூலம் இந்துத்துவ இயக்கங்களுக்கு கலவரம் நடத்தி முசுலிம் மக்களை கொல்வதற்கான சமூக ஆதரவு களத்தை அணியப் படுத்தி தரும் இந்த விசுவரூபம் திரைப்படத்தை நடுவண் மற்றும் அனைத்து மாநில அரசுகளும் முழுமையாக தடை செய்ய வேண்டும் என கோருவதும் அதற்காக போராடுவதும் அவசர அவசியமாக உள்ளது.


கட்டுரையை நிறைவு செய்யும் முன்பாக விசுவரூபம் படத்திற்கு ஆதரவாக வரும் வாதங்களையும் பார்த்து விடலாம்.திரைப்பட துறையினரும் கமல காசனின் ஆதரவாளர்களும் அந்த படம் தடை செய்யப்பட கூடாது என்று கூறி அதற்கான காரணங்களையும் இப்படி பட்டியல் இடுகிறார்கள்.

திரைப்பட சான்றிதழுக்கான தணிக்கை வாரியம் படத்தை பார்த்து விட்டுத்தான் திரையிடலுக்கான அனுமதியை வழங்கியுள்ளது. சமூகத்தை பிளவு படுத்தும் வகையிலோ ஒரு சமூகத்தை இழிவு  படுத்தும் வகையிலோ படம் அமைந்திருந்தால் அனுமதி வழங்கி இருக்காது.

கமல் தனது செல்வம் முழுவதையும் முதலீடு செய்து நூறு கோடி உருவாக்கள் செலவில் படம் எடுத்துள்ளார்.அவர் இழப்பை சந்திக்க விடலாமா.

கலைஞர்களின் கருத்து விடுதலை உரிமையை [Right to freedom of expression] பறிக்க கூடாது.

இந்த அறிவாளிகளின் கருத்துக்களையும் ஒவ்வொன்றாக பரிசீலித்து விடலாம்.அய்யா,கருத்து கனவான்களே,திரைப்பட சான்றிதழுக்கான தணிக்கை வாரியத்தின் யோக்கியதையை நாங்களும் அறிவோம். சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதாக பீற்றிக் கொள்ளப்படும் இந்த நாட்டில்தான் நீதிமன்றங்கள்,ராணுவம்,காவல்துறை,தேர்தல் ஆணையம் உள்ளிட்டு அரசு நிறுவனங்கள் தாழ்த்தப்பட்ட,பழங்குடி,மத,மொழி சிறுபான்மை,ஏழை எளிய மக்களுக்கு எதிரான நிலை எடுத்து செயல்படுகின்றன என்பதை உலகறியும்.அதற்கு திரைப்பட தணிக்கை வாரியமும் விதி விலக்கல்ல.

மணிரத்னம் என்ற மற்றொரு ஆரிய பாம்பு ''பம்பாய்'' திரைப்படம் எடுத்ததே.பம்பாய் கலவரத்தை விசாரித்த சிறி கிருசுணா ஆணையம் கலவரத்தை திட்டமிட்டு நடத்தி முசுலிம்களை கொன்றொழித்தது சிவசேனாதான் என்று தெளிவாக அறிவித்திருகிறது. ஆனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முசுலிம் மக்கள் கொன்றொழிக்கப்பட்ட பம்பாய் கலவரம் என்ற சிவசேனா குண்டர்களின் இந்து மத வெறியாட்டத்தை மணிரத்னம் எப்படி படமாக்கினார்.கலவரத்தை துவக்கி வைத்து நடத்தியதும் கடைசியில் போதும் என முடித்துக் கொண்டதும் முசுலிம்கள்தான் என்று அந்த படத்தில் கதை அளந்தார்.இந்த மோசடிக்கும் உங்கள் தணிக்கை வாரியம் உடந்தையாக இருந்திருக்கிறது.

பெண்ணின் தொப்புளில் இந்த கூத்தாடி கழிசடைகள் பம்பரம் விடுவதையும் முட்டை பொரிப்பதையும்,ஆபாச அசைவுகளுடன் கூடிய அரை,முக்கால் அம்மணகட்டை நடனங்களையும் அனுமதிக்கும் தணிக்கை வாரியம் சமூக பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளும் என சொல்வதற்கு உங்களை போன்ற எத்தர்கள் வேண்டுமானால் அணியமாக இருக்கலாம்.நம்புவதற்குதான் ஆளில்லை.

அடுத்து கருத்து உரிமை.இதற்கு ஒரே வரியில் ஒரு விடையாக புகழ் பெற்ற ஆங்கில சொலவடையை முன் வைக்கிறோம்.

Your freedom ends where my nose begins.

ஆம்.உங்கள் கருத்து உரிமையை பிறருக்கு தீங்கிழைக்கும் வகையில் பயன்படுத்த அனுமதிக்க முடியாது.

அடுத்து கமலுக்கு ஏற்பட கூடிய பொருள் இழப்பு.கள்ளச் சாராயம் காய்ச்சுபவன் நான் முதல் போட்டிருக்கிறேன்.நான் சாராயம் விக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்பதற்கும் இந்த வாதத்திற்கும் ஒரு வேறுபாடுமில்லை.


1 comment: