Thursday, February 21, 2013

அசைவம் உண்போர் மிருக உணர்வாளர்களாம்.அவதூறு பரப்புகிறது தினமணி.

கடந்த பிப்ரவரி 19 ஆம் நாள் பாலியல் வன்முறை குறித்து தினமணி நாளிதழ் தலையங்கம் தீட்டியுள்ளது.பாலியல் வன்முறைகளுக்கு பல்வேறு காரணங்களை அடுக்கியுள்ள தினமணி அசைவ உணவு பழக்கமும் அவற்றில் ஒன்று என ஆதாரம் ஏதுமின்றி அளந்து விடுகிறது.

பார்க்க;http://dinamani.com/editorial/article1469920.ece

அதில் தினமணி என்ன சொல்கிறது.

\\மூலைக்கு மூலை திறக்கப்பட்டிருக்கும் மதுபானக் கடைகளும்; தெருவெங்கும் அசைவ உணவைப் பரிமாறும் துரித உணவகங்களும், கையேந்தி பவன்களும், அதிகரித்து விட்டிருக்கும் அசைவ உணவுப் பழக்கமும் உணர்ச்சிகளை அதிகரித்து, சாத்வீக குணத்தை மழுங்கடித்து விடுகின்றன என்கிற உண்மையை நாம் எப்போது உணரப் போகிறோம்? அவை மனிதனுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் மிருக உணர்வுகளைத் தூண்டிவிடும் என்பது விஞ்ஞானம் ஏற்றுக்கொண்டிருக்கும் உண்மை.//

அசைவ உணவு மிருக உணர்வுகளை தூண்டிவிடும் என்றும் அது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை என்றும்,அதனால்தான் பாலியல் வன்முறைகள் நிகழ்வதாகவும் ஆதாரம் ஆய்வு எதையும் காட்டாமல் அடித்து விடுகிறது.கேடு கெட்ட குடிப்பழக்கத்தையும் அசைவ உணவு உண்பதையும் சமமாக காட்டி அசைவ உணவு உண்பவர்களை இழிவு படுத்துகிறது. ஏழை உழைக்கும் மக்கள் மீதான சாதீய,வர்க்க வெறுப்பு மேலோங்க கையேந்தி பவன்களை குறிப்பிட்டு இழிவு படுத்துகிறது.

என்ன ஒரு திமிர்,ஆணவம்.இந்த நாட்டின் 90 விழுக்காட்டிற்கும் மேலான ஆகப் பெரும்பான்மையான மக்கள் அசைவம் உண்பவர்கள்.அவர்களை இதை விட கேவலமாக அவமதிக்க முடியுமா.ஊடக வலு கையில் இருப்பதால் எதை வேண்டுமானாலும் எழுதலாம்.நம்மை யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற ஆணவம் தலை விரித்தாட பெரும்பான்மையான மக்களுக்கு எதிராக நஞ்சு கக்கியுள்ளது தினமணி.

பாலுணர்வு இயற்கையானது.பாலியல் தேவை இயல்பானது.ஆரோக்கியமான ஒரு மனிதன் சத்தான உணவு உட்கொள்ளும் பட்சத்தில் பாலியல் தேவை இயற்கையாகவே உண்டாகி விடும்.அது சைவ உணவாக இருந்தாலும் சரி அசைவ உணவாக  இருந்தாலும் சரி.இதை புரிந்து கொள்ள பெரிய ஆராய்ச்சி எல்லாம் செய்ய வேண்டியதில்லை.சைவ உணவு மட்டுமே அருந்தும் சாதியினர் குழந்தை பெற்றுக்கொள்வதில்லையா என்று கேள்வி எழுப்பி எண்ணிப் பார்த்தாலே போதும்.

மானமும் அறிவும் மனிதருக்கு அழகு என்றார் பெரியார்.அந்த வகையில் தமிழினம் பார்ப்பனிய நஞ்சு கக்கும் தினமணி உள்ளிட்ட ஏடுகளை முற்று முழுதாக புறக்கணிக்க வேண்டும்.

தினமணிக்கு சில கேள்விகள்.

பற்கள் கொட்டிப் போய் தள்ளாத வயதை அடைந்திருந்த,விட்டால் இன்னும் சிறிது காலத்தில் தானாகவே செத்துப் போயிருக்க கூடிய  காந்தியாரை சுட்டுக் கொன்ற கோட்சே என்ற பார்ப்பனன் சைவ உணவு உண்பவனாக இருந்தும் அவனுக்கு எப்படி அந்த மிருக உணர்வு வந்தது.

கொலைப்பழி முசுலிம்கள் மீது விழ வேண்டும்.அதை வைத்து நாடெங்கும் முசுலிம்களை வேட்டையாடி கொன்றொழிக்க வேண்டும் என்ற கபட நோக்கத்தில் காந்தியாரை கொல்லப் போகுமுன் தன கையில் இசுமாயில் என பச்சை குத்திக் கொண்டான் கோட்சே.இந்த கேடு கெட்ட வஞ்சக எண்ணம் அவன் மனதில் தோன்ற காரணம் அவனது சைவ உணவு பழக்கமே என்று சொல்லலாமா.

சைவ உணவு பழக்கம் கொண்ட காஞ்சி சங்கராச்சாரியார் சங்கரராமனை கொலை செய்யும் அளவுக்கு மிருக உணர்வு கொண்டது எப்படி.

 சைவ உணவு பழக்கம் கொண்ட காஞ்சி சங்கராச்சாரியார் எழுத்தாளர் அனுராதா ரமணனை படுக்கைக்கு கூப்பிட்டது மிருக உணர்வு இல்லையா.

 சைவ உணவு பழக்கம் கொண்ட பார்ப்பன குடும்பத்தில் பிறந்த தேவநாதன் கருவறைக்கு உள்ளேயே ''கசமுசா'' பண்ணியபோது அவனிடம் வெளிப்பட்டது தெய்வீக உணர்வா,மிருக உணர்வா.

தள்ளாத வயதிலும் அடுக்கடுக்கான பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட  என்.டி.திவாரி என்ற சைவ உணவு பழக்கம் கொண்ட சரயுபரீன் பார்ப்பனர்  மிருக உணர்வு கொண்டது எப்படி.

RSS இயக்கம் சாத்வீகமானது என்று இந்த நாட்டில் வளரும் குழந்தை கூட சொல்லாது.அந்த இயக்கத்தை தலைமை தாங்கி நடத்தும் சித்பவன் பார்ப்பனர்கள் சைவ உணவு உண்பவர்கள்தானே.ஆனாலும் அவர்கள் கொலைவெறி கொண்டது எப்படி.


1 comment:

  1. காமத்தில் அதிக வெறி கொண்டவர்கள் பிராமணர்கள்தான்.அதிகமான கேட்ட வார்த்தைகளை பயன்படுத்துபவர்களும் அவர்கள்தான்.சுயநலத்திற்காக எதையும் செய்ய தயங்காதவர்கள் .என்ன ஆனாலும் அடங்க மாட்டார்கள்.இன்னும் எத்தனை காலம் சென்றாலும் இவர்கள் மாற மாட்டார்கள்.அடங்க மாட்டார்கள்.

    ReplyDelete