Tuesday, April 22, 2014

மோடிக்கு வாக்களிப்பது முட்டாள் என ஒப்புக் கொள்வதாகும்.

காவி கும்பலும்,பெருந்தொழில் நிறுவனங்களும் கள்ளப்பரப்புரையை வைத்தே மோடியை முதன்மர் ஆக்க துடிக்கிறார்கள்.மோடியின் ''ஒப்பற்ற'' ஆட்சியில் குஜராத் நாலு கால் பாய்ச்சலில் முன்னேறுவதாக அவர்கள் காட்டிய பம்மாத்து எல்லாம் மாய்மாலங்கள் என அம்பலமாகி விட்டது.எடுத்துக்காட்டாக குஜராத் ஒரு மின்மிகை மாநிலம் என அவர்கள் காட்டிய படம் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்கள் வெளியானபோது சாயம் வெளுத்து.சந்தி சிரித்து போனது.

அக்கணககெடுப்பின்படி குஜராத்தில் பதினோறு இலட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லை என தெரிய வந்துள்ளது.ஒரு வீட்டுக்கு சராசரியாக குறைந்த பட்சம் ஐந்து பேராவது இருப்பார்கள்.அப்படியானால் குறைந்த பட்சம் ஐம்பத்து ஐந்து இலட்சம் குஜராத்திகள் இருளில் வாழ்கிறார்கள்.இது அம்மாநில மக்கள் தொகையில் 11 விழுக்காடு ஆகும்.உற்பத்தியாகும் 11,500 மெகாவாட் மின்சாரத்தை தனியார் முதலாளிகளுக்கு வாரிக் கொடுத்து விட்டு ஏழை எளிய மக்களை மின்சாரம் இன்றி வஞ்சிக்கும் மோடி சிறந்த நிர்வாகி என்று சொன்னால் அது எத்தகைய மோசடியாக இருக்கும்.

மனித வள குறியீடுகள் அத்தனையிலும்  பின் தங்கி இருக்கும் குஜராத் மாநிலத்தைத்தான் மோடியால் மிளிர்கிறது என கதைக்கிறார்கள்.

இணையத்தில் இந்த காவி கும்பல் மோடி பற்றி வாந்தி எடுத்து நாறடிப்பதுதான் சகிக்க முடியாத கொடுமையாக இருக்கிறது.

சீன நாட்டு பேருந்து நிலையமொன்றின் புகைப்படத்தை அகமதாபாத் நகர பேருந்து நிலையம் என்று கதை கட்டினார்கள்.

பல்லாயிரம் மனித உயிர்களை பலி கொண்ட உத்தரகாண்ட் வெள்ளப் பெருக்கு என்ற மாபெரும் சோகத்திலும் இவர்கள் அரசியல் ஆதாயம் தேடினார்கள்.மோடி தன் ஏவலாள் படை கொண்டு பல ஆயிரம் குஜராத்தி பயணிகளை காப்பாற்றியதாக கதை கட்டினார்கள்.

இவையெல்லாம் கட்டுக்கதைகள் என அம்பலமானாலும் கொஞ்சம் கூட வெட்கப்படாமல் தங்கள் கள்ளப்பரப்புரையை தொடர்கிறார்கள்.இவர்களை நம்பி வாக்களிப்பதை முட்டாள்தனம் என்று சொன்னால் அதில் தவறு ஏதும் இருக்க முடியுமா.