Wednesday, December 23, 2015

சிறுவர்கள் செய்யும் செயலா பாலியல் வன்முறை.

 எனக்கு ஒண்ணு மட்டும் புரியவே இல்லை.தில்லி பாலியல் வன்முறை குற்றவாளி விடுதலை செய்யப்பட்டு விட்டான்.தொடர்ந்து நடக்கும் விவாதங்களை மீள்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.நாம் எல்லோரும் அறிந்ததுதான்.

ஒரே ஒரு கேள்விதான் எனக்கு தோன்றுகிறது,பாலுறவு என்பது பருவம் அடைந்த மனிதர்களுக்கு மட்டும்தானே அவசியமாகிறது.அதை வல்லூட்டியாக செய்தவனை இன்னும் எப்படி சிறுவன் என சொல்கிறார்கள்.

பதினேழு ஆண்டுகள் ஒன்பது மாதங்கள் மட்டுமே வயது ஆகியிருந்தால் அவன் சிறுவனாம்.அந்த சமயத்தில் பாலியல் வன்கொடுமை செய்தால் தண்டனையும்,விசாரிக்கும் சட்டமும்.அடைக்கும் சிறையும் தனியாம் .அதையே ஒரு மூன்று மாதம் கழித்து செய்தால் வேறு சட்டம்,வேறு சிறையாம்..என்ன கூத்து இது.

Monday, December 7, 2015

நயனம்: "குமிழி"- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது?பண்டைய தமிழ் மக்களின் நீர் மேலாண்மை குறித்த அறிவு வியக்க வைக்கிறது.நயனம் இணைய தளத்தில் வெளியாகியிருக்கும் அருமையான கட்டுரை.நீங்களும் படியுங்கள்.பரப்புங்கள்.நயனம்: "குமிழி"- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது?
Sunday, December 6, 2015

சென்னை வெள்ளக்காடானது.காரணம் பெருமழையா அரசின் மெத்தனமா.


இந்த புகைப்படங்கள் நேற்று [6-12-15] மாலை கூவம் ஆறு வங்கக்கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் எடுக்கப்பட்டவை.படங்களை சற்றே கூர்ந்து கவனித்தால் காரணம் எதுவென விளங்கும்.


                                                            படம் எண்.1.
                             இது நேப்பியர் பாலத்திலிருந்து எடுக்கப்பட்டது.

இந்த வெள்ளக் காலத்திலும் ஆற்றில் நீர் ஓடுவதை தெளிவாக பார்க்க முடியவில்லை.கிட்டத்தட்ட தேங்கி கிடக்கும் நீர் சற்றே ஊர்ந்து அசைந்து கடலை  நோக்கி செல்கிறது.


                                                           

                               
                         படம்.எண். 2                    
                முகத்துவாரத்தின் அருகில் எடுக்கப்பட்டது.
நேப்பியர் பாலத்தின் கீழ் 450 அடி அகலத்தில் ஓடும் ஆறு கடலில் கலக்க கிடைத்துள்ள இடம் சுமார் 100 அடி இருக்கும்.கடல் அரிப்பை தடுக்க போடப்படும் தடுப்பரண்களை போன்று  கடல் அலை அடிக்கும் இடத்தில் மணல் மேடு இருபுறமும் நீட்டிக் கொண்டிருப்பதை காணலாம்.ஆற்றின் படுகையில் தேங்கி கிடக்கும் சகதியும்  குப்பையும் தடுப்பதால் ஆற்று நீரின் வேகம் தடைப்பட்டு கடல் அலைகள்  நீரை மீண்டும் ஆற்றுக்குள் தள்ளுகின்றன.அலை திரும்பி செல்லும்போது அதனுடன் சேர்ந்து ஆற்று நீர் கடலுக்குள் செல்கிறது.இப்படியாக கடலுடன் கயிறு இழுக்கும் போட்டி நடத்தி ஆறு கொஞ்சம் கொஞ்சமாக நீரை கடலுக்குள் செலுத்துகிறது.

படம் எண் .3 
மண் வாரி இயந்திர ஓட்டுனர்கள் உயிரை பணயம் வைத்து வேலை செய்கிறார்கள்.

சென்னை வெள்ளத்தில் பிடியிலிருந்து மீண்டு வர அரசு உடனடியாக  மிதப்பான்களின்  மீது பொருத்தப்பட்ட மண் வாரிகளை கொண்டு முகத்துவாரப்பகுதியில் ஆற்றின் படுகையில் தேங்கியுள்ள சகதியையும் குப்பைகளையும் அகற்ற வேண்டும்.ஆறு கடலில் கலக்கும் இடத்தை அகலப்படுத்த வேண்டும்.நீண்ட கால நோக்கில் ஆறு முழுவதும் சரியான கால இடைவெளிகளில் தூர்  வாரி வர வேண்டும்.


Saturday, November 7, 2015

தோழர் கோவன் கைதை நியாயப்படுத்தும் பித்தலாட்டங்கள்

தோழர் கோவன் கைது - கருத்துரிமையின் மீதான கொடுந்தாக்குதல்; வன்மையான கண்டனத்துக்குரியது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிந்தாலும் தொலைக்காட்சி விவாதங்கள் மற்றும் இணைய ஊடகங்களில் செயலலிதா ஆதரவாளர்கள் கோவன் கைதை நியாயப்படுத்தி வருகிறார்கள்.
kovan 2"ஊத்திக்கொடுத்த உத்தமி" என்று ஒரு முதலமைச்சரைப் பற்றி பாடலாமா? அதுவும் ஒரு பெண் என்றும் பாராமல் இப்படி பாடுவது ஆபாசம் இல்லையா? என்கிறார்கள். இதன் வீச்சு எத்தகையதாக உள்ளது என்றால் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் கோவன் கைது குறித்த விவாதத்தில் தி.மு.க. சார்பில் பங்கேற்று, கைதைக் கண்டித்துப் பேசிய மனுஷ்யபுத்திரன் கூட இந்த வரிகளை நான் ஏற்கவில்லை என்றார். கோவன் பாடலின் கருத்தை ஏற்றுக்கொண்ட அவர் 'இந்த வரிகள் மரியாதைக் குறைவானவை' என்றார்.
அடுத்து "ஊரில் இனி கிடையாது டாஸ்மாக்கு, அடிச்சு தூக்கு" என்று பாடுவதன் மூலம் வன்முறையைத் தூண்டுகிறார் என்கிறார்கள்.
மேலோட்டமாகப் பார்த்தால் இந்த வாதங்கள் நியாயமானவையாகத் தோன்றினாலும் உள்ளடக்கத்தில் இவை பித்தலாட்டமானவை. தமிழகத்தில் அரசே சாராயக்கடைகளை நடத்துகிறது. தமிழக மக்களுக்கு சொல்லொண்ணா துயரங்களை இழைக்கும் இந்த சாராயக்கடைகளை அரசே நடத்துகிறது என்பதன் குறியீடாகத்தான் "ஊத்திக் கொடுத்த உத்தமி" என்ற வரி இருக்கின்றதேயன்றி அவை நேரடியாக செயலலிதாவை இழிவுபடுத்துவதாக எடுத்துக் கொள்ள முடியாது.
இப்போதைய தமிழக முதலமைச்சர் ஒரு பெண் என்பதால் கோவன் இப்படி பாடி இருக்கிறார். இதுவே கருணாநிதி முதல்வராக இருந்திருப்பாரேயானால் "ஊத்திக் கொடுத்த உத்தமரு கோபாலபுரத்தில் உல்லாசம்" என்று பாடியிருப்பார். [அதனாலதான் பின்னால உதவும்னு மனுஷ்யபுத்திரன் முன்கூட்டியே துண்டு போட்டு வைக்கிறாரோ]. ஆகவே மக்களுக்குத் தீங்கிழைக்கும் அரசு சாராய வணிகத்தை செய்பவர் கண்டிக்கப்படுகிறார். இதில் ஆண், பெண் பேதத்திற்கு இடமில்லை.
நாடகம், கதை, பாடல், கேலிப்படம் போன்ற கலைவடிவங்களில் பரப்புரை மேற்கொள்ளும்போது குறியீடுகள் மூலமாகத்தான் கருத்துக்கள் மக்கள் முன் எடுத்து வைக்கப்படுகின்றன. அவற்றை நேரடியான பொருளில் எடுத்துக் கொள்வது முதிர்ச்சியற்ற தன்மையாகும். இன்னின்ன சொற்களைக் கொண்டுதான் பாடல் வரைய வேண்டும், இன்னின்ன வகையில்தான் கதை, நாடகப் பாத்திரங்களும், கருத்துப்படங்களும் இருக்க வேண்டும் என கலைஞர்களுக்கு யாரும் ஆணையிட முடியாது. ஆணையிட்டால் அது சனநாயகமாகாது.
அடுத்து "அடிச்சு தூக்கு" என பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க கோரலாமா என்ற கேள்வியையும் பார்த்துவிடுவோம். முதலில் பொதுச்சொத்து என்றால் என்ன? மக்களுக்கு நன்மை விளைவிக்கும் அரசின் சொத்துக்களை பொதுச்சொத்துக்கள் எனலாம். அரசு பேருந்துகள், வரிவருவாய் ஈட்டித்தரும் பணி நடைபெறும் அலுவலகக் கட்டிடங்கள, அணைக்கட்டுகள் போன்றவை பொதுச்சொத்துக்கள் என்று சொன்னால் அதில் பொருள் உண்டு. தமிழகப் பெண்களின் தாலி அறுக்கும் சாராயக் கடைகளை பொதுச்சொத்து என சொல்லலாமா, அப்படி சொல்வது எவ்வளவு அவமானகரமானது!
அமைதி வழியில் சாராயக் கடைகளை மூடக்கோரி போராடிய சசி பெருமாளின் குரலுக்கு அரசு அளித்த மதிப்பையும், அழிவிடைதாங்கியில் போராடிய மக்கள் சாராயக் கடையை அடித்து நொறுக்கி அந்த ஊரில் சாராய வணிகத்தை இல்லாதொழித்ததையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். மக்களிடருந்து கற்றுக்கொண்டுதான் கலைஞர்கள் படைப்புகளை உருவாக்குகிறார்கள். அப்படித்தான் "அடிச்சு தூக்கு" பாடலில் வருகிறது.
ஆகவே கோவனின் பாடலில் குற்றம் காண்பதை விடுத்து சாராயக்கடைகள் என்ற தீமையை களையக் கோரி மக்கள் போராடுகிறார்களே, அதனை செவியேற்று அரசே சாராயக் கடைகளை மூடட்டும். அப்புறம் "அடிச்சு தூக்க" வேண்டிய அவசியம் மக்களுக்கு இருக்காது. முதலில் அரசு அதை செய்யட்டும். அதற்கு முன்பு தோழர் கோவனை விடுதலை செய்யட்டும்.
இந்த கட்டுரை கீற்று இணைய தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.வாய்ப்பளித்த கீற்று தோழர்களுக்கு நன்றி.

Monday, April 20, 2015

அட்சய திரியை விளம்பரங்களை தடை செய்


இன்று அட்சய திரியை.நகை கடைக்காரகளுக்கு வேட்டை நாள்.இதற்காக அவர்கள் வெளியிடும் விளம்பரங்கள் மோசடியானவை.
விளம்பரம் என்பது என்ன.ஒரு வணிகர் தனது பொருளின் தரத்தை,சிறப்புகளை எடுத்துச் சொல்லி அவற்றை வாங்குவதால் நுகர்வோருக்கு கிடைக்க கூடிய பயன்களை விளக்கி அந்த பொருளை வாங்குமாறு பொது மக்களுக்கு விடுக்கும் வேண்டுகோளை விளம்பரம் எனலாம்.

ஆனால் நகை கடைக்காரர்களோ அட்சய திரியை அன்று நகை வாங்கினால் நுகர்வோருக்கு செல்வமும்  வளமும் பெருகும் என விளம்பரம் செய்கிறார்கள்.இது ஒரு அப்பட்டமான மூட நம்பிக்கை என்பது ஒரு புறம் இருக்கட்டும்.இந்த அட்சய திரியை நாள் வருவதற்கும் அந்த வணிகரின் பொருட்களுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா அல்லது அந்த வணிகர் அந்த நாளை உலகத்துக்கு கொண்டு வந்து சேர்க்கிறாரா.ஆக;தனக்கு தொடர்பே இல்லாத ஒரு அம்சத்தை சொல்லி தனது பொருளை வாங்குமாறு சொல்கின்ற நேர்மையற்ற ஒரு வணிக தந்திரம்தான் அட்சய திரியை விளம்பரங்கள்.

சரி.அட்சய திரியை அன்று நகை வாங்கினால்  வளம் பெருகும் என்பதாவது உண்மையா.

இல்லை.இது ஒரு அப்பட்டமான பொய் என்பதை சற்றே அறிவை பயன்படுத்தி எண்ணிப்பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திங்கள் வளர்பிறையில் வரும் மூன்றாம் நாளை [அமாவாசை கழித்து வரும் மூன்றாம் நாள்].அட்சய திரியை என அழைக்கிறார்கள்.எல்லா நாட்களும் போல இதுவும் ஒரு நாள்.இது எப்படி ஒரு தனிமனிதனின் பொருளாதார நிலையை உயர்த்தவோ தாழ்த்தவோ முடியும்.அது அம்மனிதன் வாழும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை,அல்லது தேக்கத்தை பொருத்தது இல்லையா.

ஒவ்வொரு ஆண்டும் விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கிறது.பெட்ரோல் விலை,மின்கட்டணம்,பேருந்து,தொடர்வண்டி கட்டணம் ஆகியவை உயர்த்தப்படும்போது அட்சய திரியை அன்று நகை வாங்குபவர்களுக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறதா என்ன.

ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் எத்தனையோ துன்ப நிகழ்வுகள் நடக்கின்றன.தகவல் தொழில் நுட்ப துறை ஊழியர்கள் வேலை இழப்பு,குடும்பத்தில் பொருளீட்டும் உறுப்பினர்கள் சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பது ,புயல்,வெள்ளத்தால் வீடுகளும் விவசாயமும் பாதிக்கப்படுவது என்பன போன்ற பொருளாதார வீழ்ச்சியை கொண்டு வரும் நிகழ்வுகளை அட்சய திரியை அன்று நகை வாங்குவதன் மூலம் தடுத்து விட முடியுமா என்ன.இத்தகைய இடர்பாடுகளை இடைவிடாத மக்கள் திரள் போராட்டங்கள் மூலமாகவே தடுத்து நிறுத்த முடியும்.அட்சய திரியை அன்று வாங்கிய நகை நாக்கு வழிக்க வேண்டுமானால் பயன்படலாம்.மக்களின் பிரச்னைகளை ஒரு போதும் தடுக்காது.

இந்திய அரசமைப்பு சட்டம் மக்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதை மைய ,மாநில அரசுகள் மீது கடமையாக விதித்துள்ளது.அந்த அடிப்படையில் மக்களிடம் மூட நம்பிக்கையை வளர்க்கும் அட்சய திரியை விளம்பரங்களை தடை செய்ய வேண்டும் என மக்கள் நலனில் அக்கறை உள்ளோர் அனைவரும் குரலெழுப்ப வேண்டும்.

தொடர்புடைய பதிவுகள்.


Monday, January 5, 2015

பாலச்சந்தரும் பார்ப்பனியமும்

இயக்குனர் பாலச்சந்தர் மறைந்து விட்டார் என்று திரையுலகமும் ஊடகங்களும் வடிக்கும் கண்ணீர் ஆறாகப் பெருகி வந்து தமிழகத்தையே சோகக் கடலில் மூழ்கடிக்க முனைகிறது. பாலச்சந்தர் படைப்பாற்றல் மிக்கவர். செக்கு மாடுகளைப் போல பெரும் கதாநாயகர்களை சுற்றியே வட்டமிட்டுக்கொண்டிருந்த தமிழ் திரையுலகின் போக்கை மாற்றி அமைத்தவர், திறமைசாலி என்பதெல்லாம் உண்மைதான்; மறுக்கவில்லை.
balachandarஒரு கலைஞன் இந்த திறமைகள் மூலம் அவன் சொந்த வாழ்வில் வெற்றி பெறலாம், வணிக ரீதியில் வெற்றி பெறலாம், அவனது குடும்பத்தார், உறவினர்கள் ,நண்பர்கள், அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் என்று பலரை வாழ வைக்கலாம். இந்த திறமைகளுக்காக மட்டுமே ஒட்டு மொத்த சமூகத்தின் போற்றுதலுக்கு உரியவன் ஆகி விட முடியாது. தனது படைப்பாற்றலை, திறமையை பரந்து பட்ட மக்களின் நன்மைக்காக பயன்படுத்துபவர்கள் மட்டுமே மொத்த சமூகத்தின் போற்றுதலுக்கு உரியவர்களாக ஆகிறார்கள். அப்படி பார்க்கும்போது நம்மால் பாலச்சந்தரை போற்ற முடியவில்லை. தூற்றுவதும் நமது நோக்கமில்லை. உண்மைகளை நினைவு படுத்துவதே பதிவின் நோக்கம்.
பாலச்சந்தர் திரையுலகில் அடியெடுத்து வைத்த அறுபதுகள் தமிழக அரசியல் வரலாற்றில் கொந்தளிப்பான கால கட்டம். தந்தை பெரியார் அவர்களின் அரும் பெரும் போராட்டங்களால் கிடைத்த, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை ஓரளவுக்கேனும் கை தூக்கி விடும் இட ஒதுக்கீடு காரணமாக அரசுத் துறைகளில் தங்களின் ஆதிக்கம் பறி போவதைக் கண்டு பார்ப்பனர்கள் உள்ளூர கருவிக்கொண்டிருந்த காலம் அது. அதனை வெளிப்படையாக சொல்ல முடியாமல் இட ஒதுக்கீடு காரணமாக தாங்கள் வஞ்சிக்கப்படுவதாக கள்ளப்பரப்புரைகளை முடுக்கி விட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த கள்ளப்பரப்புரையின் திரையுலகப் பிரதிநிதிகளில் ஒருவர்தான் பாலச்சந்தர்.
அரங்கேற்றம் என்ற இவரது படத்தில் ஒரு பார்ப்பன பெண் குடும்ப வறுமையின் காரணமாக விபச்சார தொழில் செய்வதாக காட்டியிருப்பார். கலைகளும், இலக்கியங்களும் அவை படைக்கப்படும் காலத்தை காட்டும் கண்ணாடிகள் என்பார்கள். அந்த அடிப்படையில் ஒரு பார்ப்பனப் பெண் வறுமையின் காரணமாக விபச்சார தொழில் செய்வதென்பது எப்பேர்ப்பட்ட வரலாற்று புரட்டு. மெய்யுலகில் வறுமையால் விபச்சாரப் படுகுழியில் தள்ளப்படுபவர்கள் அத்தனை பேரும் ஒடுக்கப்பட்ட சமூக பெண்களாகத்தான் இருக்கிறார்கள். அக்கிரகாரத்தில் சொந்த வீடு, கூடுதலோ குறைவோ ஏதோ ஒரு வருமானம் தரும் கோயில் குருக்களாக இருக்கும் தந்தை இப்படி அமைந்த சூழலில் அந்தப் பெண் விபச்சாரத்துக்குப் போவதாக சொல்லியிருப்பார். அந்த படத்தில் கோயில் குருக்களின் குடும்பம் பசியும் பட்டினியுமாக காலம் தள்ளுவதாகவும் கதை அளந்திருப்பார்.
நண்பர்களே, எண்ணிப்பாருங்கள். உங்கள் வாழ் நாளில் உடல் உழைப்பில் ஈடுபட்டு குடும்பத்தை காப்பாற்றும் ஒரு பார்ப்பனரையாவது நீங்கள் பார்த்ததுண்டா? இருக்காது. பாலச்சந்தர் சொல்வது போல் பார்ப்பன குடும்பங்கள் பட்டினி கிடக்கும் அளவுக்கு வறுமையால் வாடுவது உண்டென்றால் மூட்டை தூக்கிப் பிழைக்கும் ஒரு பார்ப்பனர் கூட அந்த சமூகத்திலிருந்து உருவாகவில்லையே, ஏன்?
இவரது இன்னொரு படம் ''வானமே எல்லை''யில் ''உயர் சாதி''யில் பிறந்த ஒரே காரணத்தால் வேலை கிடைக்காத, படித்த இளைஞன் ஒருவன் தற்கொலை செய்து கொள்ள முயல்வதாகவும் காட்டி இருப்பார். ஆனால் உண்மை நிலை என்ன? இந்த படங்கள் வெளிவந்த எழுபதுகளிலும் எண்பதுகளிலும் பார்ப்பனர்கள் எந்த அளவுக்கு அரசுத் துறைகளை ஆக்கிரமித்திருந்தார்கள் என்பதை எழுத்தாளர் குஷ்வந்த் சிங் அம்பலப்படுத்தியுள்ளார்.
1990 ஆம் ஆண்டு அவர், ‘பார்ப்பனர்கள் ஆதிக்க சக்தி’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் இவ்வாறு கூறியிருந்தார்:
“மக்கள் தொகையில் 3.5 சதவீதம் உள்ள பார்ப்பனர்கள் 70 சதவீத அரசு வேலைகளில் இருக்கிறார்கள். உயர் அதிகாரிகளாக உள்ளவர்களை மட்டும் சுட்டிக்காட்டுகிறேன். துணைச் செயலாளர்கள் என்ற நிலைக்கு மேலாக உள்ள 500 பதவிகளில் 310 பேர் பார்ப்பனர்கள் (63 சதவீதம்); 26 தலைமைச் செயலாளர்களில் 10 பேர் பார்ப்பனர்கள்; 27 ஆளுநர்கள் மற்றும் துணை ஆளுநர்களில் 13 பேர் பார்ப்பனர்கள்; 16 உச்சநீதிமன்ற நீதிபதிகளில் 9 பேர் பார்ப்பனர்கள்; 330 உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 166 பேர் பார்ப்பனர்கள்; 140 வெளிநாட்டு தூதர்களில் 58 பேர் பார்ப்பனர்கள்; 3300 அய்.ஏ.எஸ். அதிகாரிகளில் 2376 பேர் பார்ப்பனர்கள். தேர்ந்தெடுக்கப்படுகிற பதவிகளிலும் இதே நிலைதான். 508 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 190 பேர் பார்ப்பனர்கள்; 244 மாநிலங்களவை உறுப்பினர்களில் 89 பேர் பார்ப்பனர்கள். 3.5 சதவீத மக்கள் தொகை கொண்ட பார்ப்பன சமூகம், நாட்டில் கிடைக்கக்கூடிய மொத்த பதவிகளில் 36 சதவீதத்திலிருந்து 63 சதவீதம் வரை இருக்கின்றனர் என்பதையே இந்த புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இது எப்படி சாத்தியமானது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், பார்ப்பனர்களின் 'கூர்ந்த அறிவுத் திறன்' தான் இதற்குக் காரணம் என்பதை மட்டும் நான் நம்பத் தயாராக இல்லை”
இன்றைய கால கட்டத்தில் கூட சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கூடாது என்று பார்ப்பன பனியா கும்பலின் அரசுகள் அடம் பிடிக்கின்றனவே! அவர்கள் ஆதிக்கம் அம்பலமாகி விடக்கூடாது என்ற கள்ள நோக்கம்தானே காரணம்.
இரண்டாயிரம் ஆண்டுகளாக நம்மை சாகடித்தவர்கள், இன்றும் தங்கள் ஆதிக்கத்தை காங்கிரசு கட்சியாக, சங் பரிவாராக, கிரிக்கெட்டாக, திரைப்படமாக, சமஸ்கிருதமாக, வாஸ்துவாக, சோதிடமாக தக்க வைத்திருப்பவர்கள் சார்பாக பாலச்சந்தர் நம்மைப் பார்த்து 'வானமே எல்லை'யில் சொல்கிறார்: ''வேலை குடுக்காம எங்களை சவாடிக்கிறீங்க'' என்று. இப்படியான கள்ளப்பரப்புரைகள் சமூகத்தில் பாரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதனால்தான் பிற்பட்ட மற்றும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களே ஒரு சிலர் விபீடணர்களாக மாறி இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசுவதை பார்க்கிறோம்.
விபீடணர்கள் இருக்கும் வரை ராமன்களுக்கு கொண்டாட்டம்தான்.
இந்த கட்டுரை கீற்று இணைய தளத்திலும் வெளியாகியுள்ளது.வாய்ப்பளித்த கீற்று தோழருக்கு நன்றி.
கீற்று தளத்தில் பதிவு குறித்து வந்த மறுமொழிகளும் விவாதங்களும்.


+4#1 Chandrasekaran Subramaniam 2014-12-29 15:54
எவ்வளவு வறுமையில் இருப்பினும் எந்த ஒரு உயர்வகுப்புக் குடியாவது செருப்பு தைக்கவோ, மூட்டை தூக்கவோ, கழிவறை சுத்தம் செய்யவோ, துணி வெளுக்கவோ போகாது. அவர்களுக்கு அந்த தொழில்செய்பவர்க ள் நீசர்கள், தீண்டத்தகாதவர்க ள். அவர்களை நம்பித்தானே இப்போது இருக்கும் மத்திய மாநில அமைச்சர்களும், அதிகாரிகளும், கோவில் கருவறையில் கூட இந்த 2015ஆம்
ஆண்டில் கூட நுழைய முடியாதபடி சாதிக் கோட்டையை கட்டிக் கொண்டு உள்ளார்கள். எப்போது அமாவாசை, பௌர்ணமி, பிரதோசம்,
நவக்கிரகம் என கடவுள் பேரைச் சொல்லி செய்யும் கயமைத்தனம் ஒழியுமோ, சமஸ்கிருதம் பேசுவோரை நம்பி செல்லும் சமுதாயம் திருந்துமோ? கடவுளை நம்புங்கள், அவன் பெயரில் நடத்தும் அக்கிரமங்களை சாதிப் பாகுபாடுகளை, சமூகத்தில் உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்து கொண்டு நம்மை ஏளனம் செய்யும் கூட்டத்திடம் ஏமாறாதீர்கள்.
Report to administrator
+6#2 v.z.shukoor 2014-12-29 17:52
இயக்குநர் இமயத்தின் திரையுலகப்
புரட்சி:
=======================================
தனது மகள் விரும்பும் நபரின்
மகனை விரும்பும் தாய்
# அபூர்வராகங்கள்
தனது மகள் உறவு கொண்ட நபரை
உறவு கொள்ளும் தாய்...
# அவள்ஒருதொடர்கதை
கணக்கிலடங்கா பெண்களுடன் உறவு
கொள்ளும் நபர்...
# மன்மதலீலை
காதலியை மனைவியாக்கி
கள்ளக்காதலியை
துணைவியாக்கி...
# அச்சமில்லைஅச்சமில்லை
காதல் மனைவியை கைவிட்டு
வேறொருத்தியை
மனைவியாக்கி...
# இருகோடுகள்

இயக்குநர் இமயம் உண்மைலேயே
பெரிய தில்லாலங்கடி தான்.
-7#3 ப்ரனா 2014-12-29 21:00
திரு.பாலச்சந்தர ் இயக்கிய "101" திரைப்படங்களில் இரண்டே திரைப்படங்களை சுட்டிக் காட்டிவிட்டு, அவரை பார்ப்பனிய பிரதிநியாய் சித்தரித்திருப் பது எழுத்தாளரின் நகைச்சுவை உணர்வை காட்டுகிறது. இது போன்ற நகைச்சுவை கட்டுரைகளை "திரு. திப்பு" அவர்கள் நிறைய படைக்க என் வாழ்த்துக்கள். - ப்ரணா
Report to administrator
+4#4 கதிரவன் 2014-12-30 00:14
திப்பு அவர்களே, ப்ரனா சொல்வது சரிதான். தாங்கள் ஒரு பானைச்சோற்றுக்க ு இரு சோறுபதமென எடுத்துக்காட்டி யிருப்பது தவறுதான். தாங்கள் சற்று முயன்றால் எப்படியும் அரைப்பானையாவது தேறும். இக்கட்டுரையை விரிவுசெய்து நூலாக்குக.
Report to administrator
0#5 CommonMan 2014-12-30 12:07
திரு.பாலசந்தர் அவர்கள் தீண்டாமையை மிக அழகாக உன்னால் முடியும் தம்பியில் காட்டியிருப்பார ். இவரை திரை பட இயக்குனராக பாருங்கள். எதற்கெடுத்தாலும ் பார்பனியத்தை எடுக்காதீர்கள். ஷங்கர் கூட தான் ஜென்டில்மன் படத்தில் ஏழை பார்பனன் மருத்துவம் படிக்க இயலாமல் தற்கொலை செய்துகொள்வான். பார்பனர்களில் வறுமையில் வாடுபவர்கள் இல்லையா?
Report to administrator
0#6 t.sengadir 2014-12-30 16:29
kunam naadi kutramum naadi mikai naadi mikka kolal

+1#7 திப்பு 2014-12-30 22:43
ப்ரணா;
இரண்டு படங்களா,இருபது படங்களா என்பது இருக்கட்டும்.கு ற்றச்சாட்டுக்கு ஒரு விடையும் சொல்ல முடியவில்லையா உங்களால்.இந்த இரு படங்களை காட்டி எழுதியதற்கே பச்சை மிளகாயை கடித்தது போல் பதறுகிறீர்கள்.இ ன்னும் இரண்டு குற்றச்சாட்டுக் களை வைக்கிறேன்,என்ன செய்கிறீர்கள் என்று பார்க்கலாம்,
பாலச்சந்தரை பெண்ணுரிமை போராளியாக சித்தரிக்கிறார் கள். கதாநாயகிகளுக்கு முதன்மைத்துவம் கொடுத்து பல படங்கள் எடுத்திருக்கிறா ராம்.அவரது நிழல் நிஜமாகிறது படத்தின் கம்பன் ஏமாந்தான் பாடலில்
ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லா ம்அடுப்படி வரைதானே - ஒரு
ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால்
அடங்குதல் முறைதானே
என்று பெண்களை அடுப்படியில் பூட்டி வைக்க சொன்னவரைத்தான் பெண்ணுரிமை போராளியாக கொண்டாடுகிறீர்கள்.

அடுத்து அவரது வக்கிரம்.நூல் வேலி திரைப்படத்தில் கதாநாயகன் வளர்ப்பு மகளோடு தகாத உறவு கொண்டு விடுவான்.இதுவே அருவருப்பூட்டும ் வக்கிரம் என்றால் இதை விட வக்கிரம் அடுத்து வரும்.அந்த உறவு நடைபெற்று கொண்டிருக்கும்ப ோது வெளியில் சென்று விட்டு திரும்பி வரும்அவன் மனைவியும் அவர்களின் ஐந்து அல்லது ஆறு வயது மகளும் கதவை வெளிப்புறமிருந் து திறவுகோலால் திறந்து உள்ளே நுழைவார்கள்.உள் ளே காணும் காட்சியால் ஒரு கணம் அதிர்ச்சியால் உறைந்து போவார்கள்.பிறகு சின்னஞ்சிறு மகள் அந்த காட்சியை தொடர்ந்து பார்க்காமல் தடுக்க அந்த தாய் மகளை இழுத்து திருப்பி அணைத்துக்கொள்வா ள். ஒரு பச்சிளம் குழந்தை அந்த கண்றாவியை காண்பது போல் காட்சி அமைக்க எவ்வளவு வக்கிரம் நிரம்பிய மூளை வேண்டும்.

+1#8 திப்பு 2014-12-31 16:13
எதற்கெடுத்தாலும ் பார்பனியத்தை எடுக்காதீர்கள். என்று எங்களுக்கு அறிவுரை கூறும் அல்லது உத்தரவு போடும் CommonMan அவர்களே,முதலில் சந்து கிடைக்கும் இடமெல்லாம் பார்ப்பனியத்தை புகுத்தாதீர்கள் என்று அவர்களுக்கு அல்லது உங்களவாக்களுக்க ு அறிவுரை சொல்லுங்கள்.அவர ்கள் புகுத்துவதால்தா ன் விமர்சிக்க வேண்டிய அவசியமே எழுகிறது.

பார்பனர்களில் வறுமையில் வாடுபவர்கள் இருக்கிறார்கள் என்கிறீர்கள்.இருக்கலாம்.ஆனால் அது மிக மிக குறைந்த விழுக்காட்டினரா கவே இருப்பார்கள்.பா ர்ப்பன பனியா சமூகம்தான் அரசு ,வணிகம்.பொருளாத ாரம் என்று அத்தனை துறைகளையும் பெருவாரியாக ஆக்கிரமித்துள்ள து.அதனால்தான் சாதி வாரி மக்கள் தொகை கூடாது என தடை போடுகிறது அவர்களால் இயக்கப்படும் அரசு.

பார்பனர்களில் கணிசமானோர் வறுமையில் வாடுவது உண்மையென்றால்

ஏர் உழும் பார்ப்பனர் ஒருவர் கூட இல்லையே ஏன்?
குப்பை,மலம் அள்ளும் பார்ப்பனர் ஒருவர் கூட இல்லையே ஏன்?
மீன்பாடி வண்டி ஒட்டி பிழைக்கும் பார்ப்பனர் ஒருவர் கூட இல்லையே ஏன்?
சரக்குந்துகளில் இருந்து சரக்குகளை ஏற்றி இறக்கி பிழைக்கும் பார்ப்பனர் ஒருவர் கூட இல்லையே ஏன்?
நடைபாதையில் கடை போட்டு பிழைக்கும் பார்ப்பனர்ஒருவர ் கூட இல்லையே ஏன்?
தள்ளுவண்டியில் காய்கறி விற்கும் பார்ப்பனர் ஒருவர் கூட இல்லையே ஏன்?
பழைய பேப்பர் காலி புட்டி வாங்க ஒரு பார்ப்பன வியாபாரி இல்லையே ஏன்.
கொத்தனார்,பெரியாள் சித்தாள் வேலை செய்து பிழைக்கும் பார்ப்பனர் ஒருவர் கூட இல்லையே ஏன்?
தமிழ்நாடு போக்குவரத்து துறை தொழிலாளர்களில் பார்ப்பனர்கள எத்தனை பேர் சொல்ல முடியுமா.
இப்படி சந்திக்க முடியாத பார்ப்பனர்களை எப்படி சந்திக்கலாம் என்று பார்த்தால்
கோயில்கள்,அரசு, தனியார் வங்கிகள்,அரசு,த னியார் அலுவலகங்கள் வக்கீல்கள்,மருத்துவர்கள்,தணிக் கையாளர்கள்,ஆயிர ங்களில் கட்டணம் வாங்கும் சோதிடர்கள்,இன்னும் பல உடல் வருத்தி உழைக்காமல் செய்யும் வேலைகள்.இவற்றில ் பார்க்கலாம்.

இது எதார்த்த நிலைமையா இல்லையா.இதைத்தா ன் அய்யா தந்தை பெரியார் கல்லில் செதுக்கினாற் போல் சொல்லியிருக்கிறார்.

\\, பார்ப்பான் கலப்பையைத் தொட்டால் பாவம் என்பது அவனது தர்மம். நமது பார்ப்பனர்களுக் கு எந்தக் காரியம் எப்படியிருந்தால ும், யார் எக்கேடு கெட்டாலும், தாங்கள்
மனித சமுதாயத்தில் உயர்ந்த பிறவி மக்களாகவும், உடலுழைப்பு இல்லாமல்
வாழும் சுக ஜீவிகளாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக மனித சமுதாயம்
முழுவதுமே அறிவைப் பயன்படுத்தாத ஆராய்சியைப் பற்றியே சிந்திக்காத
முட்டாள்களாகவும், காட்டுமிராண்டிக ளாகவும் இருக்கச் செய்யவேண்டும் என்பதே
அவர்களுடைய பிறவி புத்தியானதால் அதற்கேற்ப உலக நடப்பைத் திருப்பிப்
பாதுகாத்து வைக்கிறார்கள்./ /
Report to administrator
0#9 ப்ரணா 2014-12-31 22:29
திரு. திப்பு அவர்களுக்கு,
ஒரு படைப்பாளி என்பவன் சமூகத்தின் கண்ணாடி. எதிரில் அசிங்கம் இருந்தால் அதை தான் கண்ணாடி காட்டும்; நூல் வேலி ஒரு நிஜ சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்ப்டம். பாலசந்தரின் கற்பனை கிடையாது......அ ப்படி பார்த்தால், வில்லன் கதாபாத்திரம் படைக்கும் அனைத்து படைப்பாளிகளுமே வக்கிரமானவர்கள் என்ற பொருளில் நீங்கள் வாதிடுகிறீர்கள் .. ஏற்றுக் கொள்ள முடியாத வாதம்...

"ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லா ம் அடுப்படி வரைதானே...." அந்த கதாபாத்திரத்தின ் கருத்து...
இதே பாலசந்தரின் "மனதில் உறுதி வேண்டும்" படத்தில் வரும் பாட்டு:

"சமைக்கின்ற கரங்களும் சரித்திரம் படைப்பதை பூமி பார்க்க வேண்டும்.
தூரத்து தேசத்தில் பாரதப் பெண்மையின் பாடல் கேட்க வேண்டும்.
பெண்கள் கூட்டம் பேய்கள் என்று பாடம் சொன்ன சித்தர்களும் ஈன்ற தாயும
பெண்மை என்று எண்ணிடாத பித்தர்களே.
ஏசினாலும் பேசினாலும் அஞ்சிடாமல் வாழ வேண்டும்" - இந்த பாடலும் கே.பி படத்தில் இடம் பெற்ற பாடலே1

உங்களை போன்று, சாதனையாளர்களை குறை கூறி அடுத்தவரின் கவனத்தை தன் பக்கம் திருப்ப நினைக்கும் சாரார் நிறைய இருக்கிறார்கள்; அவர்களின் பொது குணம், ஒரு தலை பட்சமாக, முழு விவரம் அறியாத, உண்மைக்குப் புறம்பான கருத்தை பரப்புவது. அதில் நீங்களும் விதி விலக்கல்ல.

வாழ்த்துக்கள்! - ப்ரணா
Report to administrator
-1#10 t.yalthevan 2015-01-01 00:37
ok balachandar oppose resevation now thalith party also against for taking b c community statitics, they ar bramin ?
Report to administrator
+1#11 திப்பு 2015-01-02 14:57
ப்ரணா அவர்களுக்கு,

நூல் வேலி உண்மை நிகழ்வு என்கிறீர்கள். ஐந்து வயது மகள் ''அதை'' பார்த்ததும் உண்மை நிகழ்வா.

அதெப்படி ஒரு பாடல் கதாபாத்திரத்தின ் கருத்து என்று சப்பை கட்டு கட்டுகிறீர்கள்.இன்னொரு பாடலுக்கான பெருமையை பாலச்சந்தருக்கு அளிக்கிறீர்கள். அய்யா,இரண்டு கதாபாத்திரங்களு மே இயக்குநரின் படைப்புகள்தானே.

\\அவர்களின் பொது குணம், ஒரு தலை பட்சமாக, முழு விவரம் அறியாத, உண்மைக்குப் புறம்பான கருத்தை பரப்புவது. அதில் நீங்களும் விதி விலக்கல்ல. //

ஆம்,ஒரு பக்க சார்பானதுதான் என் வாதம்.பாலச்சந்த ர் பார்ப்பன உயர்சாதியினருக் காக பேசுகிறார்.நான் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக பேசுகிறேன்.அவர் அநீதியின் பக்கம்.நான் நியாயத்தின் பக்கம்.

முழு விவரம் இல்லை என்கிறீர்கள்.இர ுக்கட்டுமே .கொஞ்சம் தெரிந்த விவரங்களை சொல்லும்போதே பாலச்சந்தரின் பார்ப்பனியம் பல்லிளிக்கிறதே.

அப்புறம்,உண்மைக்கு புறம்பாக நான் எதை சொல்லிவிட்டேன் என்று குறிப்பாக சொன்னால் திருத்தி கொள்கிறேன்.
Report to administrator
+1#12 திப்பு 2015-01-02 15:00
யாழ்தேவன்
எந்த தலித் அமைப்பு சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கூடாது என சொல்கிறது என்பதை குறிப்பாக சொன்னால் மேற்கொண்டு விவாதிக்க அணியமாக இருக்கிறேன்.
Report to administrator
-1#13 ப்ரணா 2015-01-02 20:11
“எதற்கெடுத்தாலு ம் பார்ப்பனியத்தை எடுக்காதீர்கள். ...” என்ற common man னுக்கு திப்பு சொன்ன பதிலில் அவரின் அறியாமையின் விஸ்பவரூபத்தை தரிசிக்க முடிந்தது.
ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கை முறை உள்ளது.
மீனைப் பார்த்து, “எப்பொழுதும் தண்ணீரிலே சுகமாக இருக்கிறது; கரைக்கு வர பயப்படுகிறது; மீன் ஒரு கோழை” என்று சொன்னால் அது எவ்வளவு அறிவீனம்; தண்ணிரில் உள்ள இன்பமும் துன்பமும் மீனுக்குத் தான் தெரியும்....
• ஒரு கற்பழிப்பு குற்றத்திலும் பார்ப்பான் இருப்பதில்லை (99%)
• வழிப்பறி கொள்ளையில் ஈடுபடுவதில்லை
• மீட்டர் வட்டிக்கு கடன் கொடுத்து அடுத்தவன் வாழ்க்கையை கெடுப்பதில்லை
• மரணதண்டனை மற்றும் ஆயுள் தண்டனை குற்றங்களில் ஈடுபடுவதில்லை (99%)
• டாஸ்மாக் கடைகளில் பெரும்பாலும் இருப்பதில்லை
• சந்தேக கேஸில் சிறை செல்வதில்லை
• தலைவன் கண் அசைக்க காத்திருந்து காலித் தனத்தில் ஈடுபடுவதில்லை
இன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம்.
பெரியார் – ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு எதிராக பொய்ப் பிரச்சாரம் செய்து மக்களின் மனதில் வெறுப்பையும் துவேஷ உணர்வயும் தூண்டியவர். சோ ராமசாமி சொன்னது போல் “Periyar started his career as an educationist and ended up as an entertainer”.
-ப்ரணா

+1#14 திப்பு 2015-01-04 12:11
ப்ரணா பார்ப்பனர்களின் நல்லியல்புகள் என ஒரு பட்டியல் கொடுத்துள்ளார்.கொலை,கொள்ளை,அநி யாய வட்டி,பாலியல் வன்முறை,குடி,ஐய த்தின் பேரில் சிறை ,காலிகளின் வன்முறை ஆகியனவே அவை.ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

ஆத்திரத்தில் ஒரு கணம் அறிவிழந்து கொலை முதலான குற்றங்களை செய்யும் நபர்கள் ஒரு ரகம். தனிப்பட்ட முறையிலோ,குழு என்ற முறையிலோ சொந்த நலன்களுக்காக திட்டமிட்டு அந்த குற்ற செயல்களில் ஈடுபடும் கும்பல் [organised crime ] இரண்டாவது ரகம்.பார்ப்பனர் கள் இரண்டாவது ரகம்.

ராமனை ஏவி விட்டு சம்புகனை கொலை செய்தது துவங்கி பாண்டிய மன்னனை கைக்குள் போட்டுக்கொண்டு எண்ணாயிரம் மதுரைச் சமணர்களை கழுவில் ஏற்றி கொன்றது,19912-9 3 மும்பை,2002 குசராத் என வரலாறு நெடுகிலும் பார்ப்பனர்களின் கொலைக்குற்றங்கள ் எண்ணி மாளாதவை.

கொள்ளையை பொறுத்தவரை ப்ரணாவுக்கு கட்டம் போட்ட கைலியும் குறுக்கு கோடு போட்ட சட்டையும் கன்னத்தில் மருவும் இருக்கோணும் போல.மேசைக்கு கீழே கை நீட்டி லஞ்சம் வாங்கும் பார்ப்பனர்களை எந்த கணக்கில் சேர்ப்பது.

ஊரறிந்த பொம்பளை பொறுக்கி சங்கராச்சாரி ஜெயேந்திரனை லோக குருவாக கொண்டாடும் பார்ப்பனர்கள இன்னும் தனியாக பாலியல் வன்முறையில் வேறு ஈடுபடனுமா.

பார்ப்பனர்கள் விதிவிலக்கின்றி வங்கிகளில் வைப்புநிதி ,காப்பீடு போன்ற வசதிகளின்றி வாழ்வதில்லை.அவற ்றுக்கான வட்டி எங்கிருந்து வருகிறது.அந்நிற ுவனங்கள் கடனை கட்ட முடியாத பலரது சொத்துக்களை பறித்து ஏலத்தில் விடுவதை காண்கிறோம்.இப்ப டி ஊர்தாலி அறுத்து கிடைக்கும் வட்டியை அனுபவித்துக்கொண ்டே பார்ப்பனர்கள் மீட்டர் வட்டிக்கு விடுவதில்லை என்பதில் என்ன பெருமை இருக்கிறது.

குடி.சோமபானம்,சுரா பானம் எல்லாம் மறந்து விட்டதா இவருக்கு.இன்றைய பார்ப்பனர்களில் குடிகாரர்களே இல்லையா.

சாவுத்தண்டனை,வாழ்நாள் தண்டனை பார்ப்பனர்கள் பெறுவதில்லையாம் .இந்த தண்டனைகள் பெறுவதற்குரிய குற்றங்களை தனிநபராக பார்ப்பனர்கள் செய்வதில்லை என்றாலும் சங் பரிவாராக அவர்கள் நடத்தும் கொலைகளுக்கு தண்டனை வாங்கித்தர இன்றைய பார்ப்பன பனியா அரசுகள் முனைப்பு காட்டவில்லை.அவ்வளவுதான்.

காலித்தனமான வன்முறையில் பார்ப்பனர்கள் ஈடுபடுவதில்லை என்றால் சிதம்பரம் நடராசர் கோவிலில் தமிழில் பாடி வழிபட முயன்ற ஆறுமுக சாமி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பார்ப்பனர்களை ப்ராணா சமூகப்பிரஷ்டம் செய்து விட்டாரா.அண்மையில் கூட ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட போது பேருந்துகளையும் பொது சொத்துக்களையும் மக்களையும் தாக்கி அ .தி.மு.க.காலிகள ் வன்முறை வெறியாட்டம் போட்ட போது அதனை அ .தி.மு.க வினர் போராட்டம் என்று பார்ப்பன ஊடகங்கள் எழுதினவே அதை விட கேவலமான கண்ணசைவுக்கு காத்திருக்கும் காலித்தனம் உண்டா.

\\பெரியார் – ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு எதிராக பொய்ப் பிரச்சாரம் செய்து //

இந்த விவாதத்தில் பெரியார் மேற்கோள் ஒன்றை சுட்டிக் காட்டியுள்ளேன். பார்ப்பனர்கள் கலப்பையை தொடுவது அவர்கள் தர்மப்படி பாவம் என்ற அவரது கூற்று பொய்யா என்ன.உண்மைதானே.

மற்றபடி பெரியார் என்ன பொய் சொன்னார் அந்த பொய்யை வைத்து என்ன பொய் பரப்புரை செய்தார் என்று குறிப்பாக சொன்னால் மேற்கொண்டு விவாதிக்கலாம்.

-1#15 ப்ரணா 2015-01-06 02:24
திரு. திப்பு அவர்களுக்கு,

ம.வெங்கலேசன் எழுதிய "பெரியாரின் மறுபக்கம்" வாங்கிப் படியுங்கள்.

பெரியாரின் தமிழ் விரோத போக்கு, சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள முரண், திருக்குறளை பற்றி முன்னுக்குப் பின் முரணாய் பேசியது,
சாதி இந்துக்களிடமிரு ந்து தாழ்த்தப்பட்டவர ்களைப் பெரியார் பிரித்தே பார்த்த விதம்,
பெரியாரின் போலி கடவுள் மறுப்புக் கொள்கை,
பெரியாரின் ஆங்கில் மோகம்,
மதக் கொள்கையில் பெரியாரின் தடுமாற்றம்,
உண்மைக்கு புறம்பாக வரலாற்றை திரித்து பேசிய விதம்....
இன்னும் நிறைய இருக்கிறது. வாங்கி படியுங்ககள்

ஒரு இனத்திறகு எதிராக கருத்து தீவிரவாதம் செய்தவர் பெரியார். அதை யாரும் மறுப்பதற்கில்லை.

-ப்ரணா

+1#16 திப்பு 2015-01-07 08:21
கடைசியில் வெங்கடேசனை சரணடைந்து விட்டீர்கள்.அவர ் ஒரு கோடரி காம்பு.தன்னை தாழ்த்தப்பட்டவன ் என்று சொல்லிக்கொள்ளும ் அவர் தானும் தன் சமூக மக்களும் பெரியார் மட்டும் போராடி இருக்காவிட்டால் படித்திருக்கவே முடியாது என்ற உண்மையை உணராமல் தீட்டிய மரத்திலேயே பதம் பார்க்கும் இழிசெயலை செய்து கொண்டிருக்கிறார்.


தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணை பிறப்பிக்க காரணமாக இருந்ததும்,அதற் காக இந்தியாவின் அரசியல் சட்டத்தின் முதல் திருத்தத்தை கொண்டுவர செய்ததும் பெரியாரின் போராட்டங்களே.அர சியல் சட்டம் அமுலுக்கு வந்து முதல் பத்தாண்டுகளுக்க ே இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டி ருந்தது.அந்த பத்தாண்டு முடிவதற்குள் அண்ணல் அம்பேத்கர் மறைந்து விட்டார்.ஆனாலும ் இட ஒதுக்கீடு இன்று வரை தொடர்வதற்கு காரணம் அய்யா பெரியார்தான் . இந்த உண்மையை இட ஒதுக்கீட்டின் கீழ் படிக்க வாய்ப்பு கிட்டிய எங்களை போன்றோர் நன்றியோடு நினைவில் வைத்திருக்கிறோம்.கோடரி காம்போ எதிரிகளின் கள்ளப்பரப்புரைக ளை வாந்தி எடுத்து நாறடித்து திரிகிறது.

ம.வெங்கடேசனின் பெரியார் குறித்த அவதூறுகளுக்கு தகுந்த விளக்கம் கிடைக்க நான் கீழ்க்கண்ட நூல்களை பரிந்துரைக்கிறே ன்.ப்ராணாவாகிய உங்களுக்கு அல்ல.உங்களை போன்ற பார்ப்பனர்கள் எக்காலத்திலும் திருந்த மாட்டீர்கள் என்று அய்யா சொல்லி எங்களுக்கு தெரியும்.வெங்கட ேசனின் கள்ளப்பரப்புரைக ்கு பலியாக கூடிய ''சூத்திர பஞ்சம'' சாதியினருக்கு பரிந்துரைக்கிறேன்.

1.தந்தைபெரியாரும் தாழ்த்தப்பட்டோரும்
2.பெரியார் சுயமரியாதை சமதர்மம்
3.பெரியார் ஆகஸ்ட் 15
4.பெரியாரைத் திரிக்கும் புரட்டுகளுக்கு மறுப்பு
5.திராவிட இயக்கம் தலித்துகளுக்கு எதிரானதா?
6.இந்துத்துவ வேரறுக்கும் உயிராயுதமும் முதற்குடிகளும்
7.பெரியார்களஞ்சியம் ஜாதி-தீண்டாமை 1-17 பாகங்கள்
8.பெரியாரைக் கொச்சைப்படுத்து ம் குழப்பவாதிகள்

கிடைக்குமிடம்.பெரியார் திடல்.வேப்பேரி.சென்னை.

ம.வெங்கடேசனுக்கு பெரியாரின் மாணவர்கள் தகுந்த மறுப்புக்களை எடுத்து வைக்கும் வாதங்கள் இணையத்திலும் கொட்டிக்கிடக்கி ன்றன.மாதிரிக்கு ஒரு சில.

http://periyaarr.blogspot.in/2007/09/blog-post_17.html

http://thamizhoviya.blogspot.in/2009/06/blog-post_7295.html

http://tamilnothindu.blogspot.in/2009/07/tamilhindu.html

+1#17 திப்பு 2015-01-07 08:30
\\ஒரு இனத்திறகு எதிராக கருத்து தீவிரவாதம் செய்தவர் பெரியார். அதை யாரும் மறுப்பதற்கில்லை.//

உங்கள் ஆதிக்கத்தை கேள்விக்கு உள்ளாக்கினால் அது தீவிரவாதமா.பெரி யாரின் அரை நூற்றாண்டு கால பார்ப்பனிய எதிர்ப்பு பரப்புரையின் போது ஒரு பார்ப்பனர் மீது கூட வன்முறை தாக்குதல் நடந்ததில்லை.ஒரு அக்கிரகார வீடு கூட கொளுத்தப்பட்டதில்லை.ஆனாலும் அவரை தீவிரவாதி என்பீர்கள்.ஆயிர க்கணக்கான கொலை,கொள்ளை,தீவைப்பு ஆகியனவற்றை நடத்திய,நடத்தும ் RSS சமூக சேவை அமைப்பு என்பீர்கள்.நல்ல ா இருக்குய்யா உங்க வாதம்.
Report to administrator
0#18 ப்ரணா 2015-01-07 21:57
திரு. திப்பு அவர்களுக்கு,

மனிதர்களை மனிதனாய் பார்க்காமல், பெரியாரைப் போல் இவன் பார்ப்பான், இவன் பார்ப்பான் அல்லாதவன், என பிரிவினை வாதம் செய்யும் உங்களை போன்று வெறுப்புணர்ச்சி யால் இயங்குவோரின் மன நலம் சீராக, அந்த பெரியார் செருப்பால் அடித்த இறைவனை வேண்டுகிறேன்.

-ப்ரணா
0#19 ப்ரணா 2015-01-07 22:05
எப்படி பெரியார் தன்னைத் தானே தமிழ் மக்களின் காப்பாளராய் எண்ணி இயங்கினாரோ அதே போல், RSS அவர்களாக இந்த சமூகத்தை காப்பவர்களாக எண்ணிக் கொண்டுள்ளனர். RSS-சை சேவை அமைப்பு என்று சொன்னால், பிறந்த குழந்தை கூட நம்பாது. அவர்களின் ஹிந்துத்துவா கொள்கைக்கு எதிராக நான் எழுதிய கவிதை இது:

**ஹிந்துத்துவா!**
கடப்பாறை
அரிவாள்
திரிசூலம்
இவற்றோடு அலைகிறார்கள்
சாதுக்கள்! -ப்ரணா
+1#20 திப்பு 2015-01-08 10:28
திரு. ப்ரணா அவர்களுக்கு,

\\மனிதர்களை மனிதனாய் பார்க்காமல்,//

மனிதர்களை மனிதர்களாக பார்க்காமல் விலங்கினும் கீழாய் பார்ப்பது பார்ப்பனியமே.நா யும் பன்றியும் தாராளமாக நுழையும் அக்கிரகார தெருவில் தாழ்த்தப்பட்டோர ் நுழையக்கூடாது என ஆட்டம் போட்ட பார்ப்பனியத்தை ஆதரித்து பேசும் நீங்கள்,இன்றளவு ம் ''Brahmins only'' என்று வாடகை வீட்டுக்கு விளம்பரம் கொடுக்கும் நீங்கள் இப்படி பேசுகிறீர்கள்.எ ன்ன ஒரு பித்தலாட்டம்.

\\பெரியாரைப் போல் இவன் பார்ப்பான், இவன் பார்ப்பான் அல்லாதவன், என பிரிவினை வாதம்//

ஒடுக்குபவனையும் ஒடுக்கப்படுபவனை யும் பிரித்து பேசுவது பிரிவினை வாதம் என்றால் அந்த பிரிவினை வாதத்தை தொடர்ந்து செய்ய உறுதி ஏற்கிறேன்.உண்மை யில் பிரிவினை வாதம் பேசுவது நீங்கள்தான்.இந் த விவாதத்தில் உங்கள் பதிவுகளில் பார்ப்பனர்களை தனி இனம் என்றே குறிப்பிடுகிறீர ்கள். அதாவது பார்ப்பனர்கள் தமிழர்களோ,தமிழி னமோ இல்லை என்ற கமுக்கமான [ரகசியமான] அக்கிரகார உள்ளக்கிடக்கையை தன்னையறியாமல் வெளிப்படுத்துகிறீர்கள்.

\\ உங்களை போன்று வெறுப்புணர்ச்சி யால் இயங்குவோரின் மன நலம் சீராக, அந்த பெரியார் செருப்பால் அடித்த இறைவனை வேண்டுகிறேன்.//

அடேங்கப்பா;கலாய்க்கிறாராம்.யாருக்கு மனநலம் சீராக வேண்டும்.தலையில ் பிறந்தவன் நான்,காலில் பிறந்தவன் நீ என இருபிறப்பாளர் பெருமை பேசி அதன் அடையாளமாக பூணூலை உருவி விட்டுக்கொண்டு திரியும் உங்களுக்கா,பிறப ்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று வள்ளுவனின் தமிழ் நெறி போற்றும் எங்களுக்கா.

\\RSS-சை சேவை அமைப்பு என்று சொன்னால், பிறந்த குழந்தை கூட நம்பாது.//

நன்றி,முதல் முறையாக இந்த விவாதத்தில் உண்மை பேசி இருக்கிறீர்கள். அதே குழந்தை பெரியார் கருத்து தீவிரவாதம் செய்தார் என்பதையும் நம்பாது.