Monday, November 21, 2016

500 / 1000 ரூபாய் தாள் ஒழிப்பில் மோடிக்கு சொம்படிக்கும் ஜெயமோகன்

Related image

 500 / 1000 ரூபாய் தாள் ஒழிப்பில் மோடிக்கு சொம்படிக்க கிளம்பிட்டாரு ஜெயமோகன்.

அவரது மொத்த குப்பையையும் கிளற வேண்டியதில்லை.அது பாத்தாலே குப்பைன்னு தெரியுது.நாத்தம் பொறுக்க முடியாது என்பதால் ஒன்றை மட்டும் பார்க்கலாம்.

கருப்பு பணம் எல்லாம் ரூபாய் தாள்களாகத்தான் இருக்குதாம்.உள்ளொளியில் அதனை கண்டடைந்த பரவசத்தில் ஆனந்த கூத்தாடுகிறார். அதற்க்கு அவர் சொல்லும் காரணம் இபபோதெல்லாம் வட்டி,நிலம்,தங்கம் ஆகியவற்றில் கறுப்பு பணத்தை போட முடியாதாம்.வட்டியும்,நிலமும் பெரிய அரசியல்,வன்முறை கும்பல் வலு இல்லாமல் செய்ய முடியாதாம்.

அய்யா அறிவாளியே,,ஒரு நூறு ஏக்கர் நிலத்தை வாங்கி அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பதற்க்கு வேண்டுமானால் அரசியல் வலு ,அடியாள் வலு தேவைப்படலாம்.ஆனால் அந்த அந்த அடுக்குமாடிகளில் ஓரிரண்டு குடியிருப்புகளை சில கோடி ரூபாய்களுக்கு வாங்குவதற்க்கு என்ன அரசியல் ,அடியாள் வலு தேவைப்படப் போகிறது.

அடுத்து திரைப்பட துறை,வீட்டு மனை தொழில் போன்றவற்றில் நூறு கோடி இருநூறு கோடி என வட்டிக்கு கடன் கொடுத்து வசூலிக்க அரசியல் ,அடியாள் வலு தேவைப்படலாம்.சில கோடிகளை வங்கிகளிலும் கடன்பத்திரங்களிலும் முதலீடு செய்ய என்ன அரசியல் ,அடியாள் வலு தேவைப்படப் போகிறது.இந்த கோடிகளெல்லாம் கருப்பாக இருக்க முடியாதா என்ன.

அடுத்து தங்கத்தில் கருப்பு பணத்தை பதுக்க மாட்டார்களாம்.கடினமாம்.இன்றைக்கு கூட நகை கடைகளில் ரசீது வேண்டாம்.VAT இல்லாமல் தங்க நகை வேண்டும் என்றால் கிடைக்கும்.இந்த பூனையோ கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருண்டு விட்டதாக கதைக்கிறது.

மோடிக்கு சொம்படிக்க அதாவது ஒரு தீமைக்கு வக்காலத்து வாங்க கிளம்பினால் இப்படித்தான்  உளறிக்கொட்டி உலகத்தோர் பார்வையில் முட்டாளாக நிற்க்க வேண்டியிருக்கும்.

2 comments:

  1. ஹவாலா பணத்திலும் , பாகிஸ்தான் கள்ள பணத்திலும் வாழ்ந்து வந்த துலுக்கர்களுக்கு மோடியின் திடடம் பயங்கர அடிதான்

    ReplyDelete
  2. இது எனது வலைப்பூ .நான் விரும்பியிருந்தால் இந்த அருவருபபூட்டும் அவதூறு பின்னூட்டத்தை வெளியிடாமல் தடை செய்திருக்க முடியும்.ஆனாலும் வெளியிடுவதற்கான காரணம் ''தேச பக்த கேடி''களின் யோக்கியதையை [அது ஏற்க்கனவே நாறிப்போய்த்தான் கிடக்கிறது] நண்பர்களும் பார்க்கட்டும் என்பதுதான்.

    அனாமதேய தோசை பக்தரே ,கட்டுரை பற்றி எதுவும் விமரிசனம் வைத்தால் பதில் சொல்லலாம்.இப்படி வாய்க்கு வந்ததை கழிஞ்சு வச்சா என்னத்தை சொல்றது.அது சரி,சொந்த பெயரை கூட வெளியிட துணிவற்ற கோழைக்கு மூளை வேலை செய்யுமா என்ன.

    ReplyDelete