தமிழ் மக்களிடையே பேச்சு வழக்கில் ஆண்டு என்பது வருஷம் என்ற வடமொழிச்சொல் கொண்டே வழங்கப்படுகிறது.இது தேவையற்ற ஒன்று. தமிழில் போதுமான சொற்கள் இருக்கும்போது நமக்கு ஏன் பிறமொழி சொற்கள்.
இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்த்தற்று என்ற வள்ளுவன் மொழி கடுஞ்சொல் கூறுவதற்கு மட்டுமல்ல, இங்கும் பொருத்தமாக உள்ளது.
வருஷம் என்ற சொல் தோன்றிய விதத்தையும் ஆண்டு என்ற சொல் தோன்றிய
விதத்தையும் நாம் அறிவது அவசியம்.
வடமொழியில் "வருஷித்தல்" என்றால் மழைபொழிவு என்று பொருள். ஒரு மழைக்காலத்திற்க்கும் அடுத்த
மழைக்காலத்திற்க்கும் இடையிலான காலம் "
வருஷம்" என வழங்கப்படலாயிற்று.
தமிழ்நாட்டின் காடுகளில் ஏராளமாக காணப்படும் மூங்கில் மரங்கள் ஆடி மாதத்தில் பூ பூக்கும். அந்த மூங்கில் பூவுக்கு "ஆண்டல் " என்றொரு பெயர் உண்டு. ஆண்டல் பூ ஒரு முறை பூக்கும் காலத்திற்கும் மறுமுறை பூக்கும் காலத்திற்கும் இடையிலான
காலம்
ஆண்டு என்று குறிக்கப்பட்டது.
இதற்கிடையே வருஷத்தை வருடமாக்கி தமிழ்போல் காட்டி நம் தலையில் கட்டும் நயவஞ்சகத்தையும் முறியடிப்போம்.
நன்றி மீண்டும் சந்திப்போம்..........
No comments:
Post a Comment