உங்க அளவுக்கு முடியாது மோடி.
ஏதோ தமிழ் நாட்டுக்கு ஏற்றமுறையில்
முசுலிம்களை ஒரு வழி பண்ணிடுறேன்.
செயலலிதா தான் ஒரு அப்பட்டமான பார்ப்பன பாசிச வெறி கொண்ட இந்துத்வா அரசியல்வாதி என அடையாளம் காட்டிக்கொள்ள ஒரு போதும் தயங்கியதில்லை.தமிழகத்தின் பார்ப்பனிய எதிர்ப்பு திராவிட அரசியல் பாரம்பரியம் காரணமாக தமது இந்துத்வ கொள்கைகளை வெளிப்படையாக செயல்படுத்த முடியாமல் செயா சற்றே அடக்கி வாசிக்கிறார்.இல்லையேல் அ.தி.மு.க.வை எப்போதோ தமிழகத்தின் சிவசேனாவாக மாற்றி இருப்பார். அப்படி இருந்தும் கூட இந்துத்வா அரசியலை இலை மறைவு காய் மறைவாக கடைபிடிக்க அவர் தயங்குவதில்லை.
அதற்கான சான்றுகள் தேடி எங்கும் அலைய வேண்டியதில்லை.கடந்த இரு பத்தாண்டுகளில் நிகழ்ந்த நிகழ்வுகளை சற்றே நினைவு படுத்திப் பார்த்தாலே போதும்.
சான்று.1.பாபர் மசூதி இடிப்புக்கு முன்பாக நடைபெற்ற ''நாட்டு ஒருமைப்பாட்டு அவை''கூட்டத்தில் பாபர் மசூதி வளாகத்தில் கர சேவை நடைபெற அனுமதிக்க வேண்டும் என்று கோரிய பா.ச.க.அல்லாத அரசியல் கட்சித்தலைவர் ஒரே ஒருவர்தான்.அவர் வேறு யாருமல்ல.''நான் பாப்பாத்திதான் என்னை யாரும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது'' என்று தமிழக சட்டப்பேரவையில் அறிவித்த செயாவேதான்.
பாபர் மசூதி விவகாரத்தை காட்டி நாடெங்கும் இந்து மத வெறி நஞ்சை விதைக்கும் நோக்கத்துடன் சங் பரிவார் கும்பல் நடத்திய செங்கல் பூசை ஊர்வலம்,அத்வானியின் ரத யாத்திரை காரணமாக நாடெங்கும் முசுலிம்களுக்கு எதிரான கலவரங்கள் நடத்தப்பட்டு பல ஆயிரம் முசுலிம்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.அது குறித்து எந்த மன உறுத்தலும் இன்றி சங் பரிவார் கும்பல் மேலும் வகுப்பு கலவரங்கள் நடத்த ஏதுவாக பாபர் மசூதி இடிப்புக்கு வழிவகுக்கும் வகையில் கரசேவை நடத்த அனுமதிக்க கோரிய கல்நெஞ்சக்காரர்தான் செயா.
2.பாபர் மசூதி இடிப்புக்கு தமிழகத்திலிருந்தும் குண்டர்களை திரட்டி அனுப்பியவர்தான் செயா.
3.2002 ஆம் ஆண்டு இந்திய வரலாறு கண்டிராத வகையில் ஒரு மாநில அரசே திட்டமிட்டு நடத்திய வகுப்பு கலவரம்தான் குசராத் முசுலிம் இனப்படுகொலை.அந்த இனப்படுகொலையை தொடர்ந்து நடந்த சட்டமன்ற தேர்தலில் தூண்டிவிட்ட மதவெறி நெருப்பின் துணை கொண்டு வெற்றி பெற்றார் கொலைபாதகன் மோடி.அப்போது மோடியின் பதவியேற்பு விழாவுக்கு ஓடோடிச்சென்று கலந்து கொண்டு வாழ்த்தி மகிழ்ந்தவர்தான் அன்றைய தமிழக முதல்வர் செயா.அப்போது அவர் பா.ச.க.வுடன் கூட்டணி ஒன்றும் அமைத்திருக்கவில்லை.மாறாக அவரது பிறவி எதிரி தி.மு.க.தான் பா.ச.க.வுடன் கூட்டணி கட்டிக் கொண்டு தில்லியில் பதவி சுகம் அனுபவித்துக் கொண்டிருந்தது.ஆனாலும் அவரை அந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு உந்தித் தள்ளியது எது.வேறென்னவாக இருக்க முடியும் அவரது பார்ப்பனிய இந்து மத வெறியைத்தவிர.
இதன்மூலமாக அவர் தெரிவித்த,தெரிவிக்கும் செய்தி என்ன.
''சந்தர்ப்பமும் சூழ்நிலையும் ஏதுவாக அமைந்தால் இது போன்ற ஒரு முசுலிம் இனப்படுகொலையை எனது அரசு மூலமாக நானும் நடத்துவேன்'' இதுதான் அவரது செய்தி.
இதன்மூலமாக அவர் தெரிவித்த,தெரிவிக்கும் செய்தி என்ன.
''சந்தர்ப்பமும் சூழ்நிலையும் ஏதுவாக அமைந்தால் இது போன்ற ஒரு முசுலிம் இனப்படுகொலையை எனது அரசு மூலமாக நானும் நடத்துவேன்'' இதுதான் அவரது செய்தி.
4.தமிழகத்தில் செல்லாக்காசாக கிடந்த பாரதிய சனதா கட்சியை 1998 நாடாளுமன்ற தேர்தலின்போது கூட்டணியில் சேர்த்து அக்கட்சிக்கு தமிழகத்தில் ஒரு முகவரி ஏற்படுத்தி கொடுத்தவர் செயலலிதா.சமய நல்லிணக்கத்துக்கு பெயர் பெற்ற தமிழகத்தின் அமைதியை கெடுக்க பா.ச.க என்ற நச்சு செடிக்கு நீர் ஊற்றினார்.
மேலும் செயா ஒரு கபடவேடதாரி என்பதற்கு பா.ச.கவுடனான அவரது உறவும் ஒரு சான்று.1999 ஆம் ஆண்டு சென்னை கடற்கரையில் பிளவு படாத த.மு.மு.க.நடத்திய முசுலிம்கள் வாழ்வுரிமை மாநாட்டில் கலந்து கொண்டு செயா ஆற்றிய உரையில் இருந்து சிறுபகுதி இது.
''கடந்த 1998 நாடாளுமன்ற தேர்தலில் பா.ச.க வுடன் கூட்டணி அமைத்து தவறு செய்து விட்டேன்.கருணாநிதியை போல் அன்றி செய்த தவறை ஒப்புக்கொள்ளும் துணிச்சலும் நேர்மையும் எனக்கு உண்டு.அந்த தவறுக்கு பிராயச்சித்தமாக நானே பா.ச.க ஆட்சியை கவிழ்த்து விட்டேன். இனி ஒரு போதும் அ.தி.மு.கழகம். பா.ச.கவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளாது.''
இப்படி சொல்லி 1999 நாடாளுமன்ற தேர்தலில் முசுலிம்களின் வாக்குகளை பொறுக்கிக் கொண்ட செயா அதற்கு அடுத்து வந்த 2004 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பா.ச.கவுடன் கூட்டணி வைத்துக் கொண்டார்.இதுதான் செயாவின் அரசியல் நேர்மை.
5.ஆந்திராவில் 2004 சட்டமன்றத் தேர்தலில் முசுலிம்களுக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிப்பதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தது காங்கிரசு.அதன்படி அம்மாநில அரசு இட ஒதுக்கீடு வழங்கி ஆணை பிறப்பித்த போது அதனை கடுமையாக எதிர்த்து அறிக்கை வெளியிட்டார் செயலிதா.இதிலிருந்தே அவரது உள்ளத்தில் எந்த அளவுக்கு பார்ப்பனிய இந்து மத வெறி முசுலிம்கள் மீதான வெறுப்பை கொழுந்து விட்டு எரிய செய்திருக்கிறது என புரிந்து கொள்ளலாம்.
இந்த செயாதான் இப்போது முசுலிம்களுக்கு கருணாநிதி அளித்துள்ள 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடை மேலும் கூடுதலாக்க ஆவன செய்யப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்து முசுலிம் வாக்குகளையும் பெற்று ஆட்சியை பிடித்துள்ளார்.பாவம்,முசுலிம் மக்கள்.நரியின் நாட்டாமையில் ஆடுகளுக்கு நல்வாழ்வு கிட்டும் என நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.
6.தமிழ் மக்களின் பாரம்பரிய வழிபாட்டு முறைகளை காட்டுமிராண்டித்தனம் என்று சித்தரித்து அவற்றை அழித்து பார்ப்பனிய அடிப்படையிலான வழிபாடுகளை தமிழ் மக்கள் மீது திணிக்கும் நோக்கத்தில் ''கோவில்களில் ஆடு,கோழி பலியிடுதல் தடுப்பு சட்டம்''கடந்த ஆட்சி காலத்தில் கொண்டு வந்தவர்தான் செயலிதா. மேலும் தமிழ் மக்களின் மதத்தை தேர்ந்தெடுக்கும் உரிமையை மறுக்கும் வகையில் ''மத மாற்ற தடை சட்டம்'' கொண்டு வந்ததும் அவர்தான். பின்னர் 2004 நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்த காரணத்தால் இந்த சட்டங்களை அவர் திரும்ப பெற்றாலும் இப்போது மீண்டும் மிருக பலத்துடன் ஆட்சியை கைப்பற்றியிருக்கும் துணிவில் மறுபடியும் இத்தகைய உரிமை பறிப்பு சட்டங்களை கொண்டு வர செயா திட்டமிட்டு கொண்டிருக்கலாம்.யாரறிவார்.அவரது குருநாத ''சோ''வுக்கே வெளிச்சம்.
ஆக.தமிழ்நாட்டில் ஆட்சியை கைப்பற்றி இருக்கும் செயலலிதா மோடியின் தமிழக வடிவமே.
அனைத்து தகவல்களையும் திரட்டி செம சூடாக கொடுத்து இருக்கிறீர்கள். புரிய வேண்டுபவர்களுக்கு புரிய வேண்டும். இப்போதுதான் இதைப்பற்றி எழுதிக்கொண்டு இருந்தேன். இவர் ஒரு நர்ரேந்திர ஜெ.. என்று வேறு ஒரு கோணத்தில்..!
ReplyDelete'நச்' பதிவு. மிக்க நன்றி சகோ.திப்பு.