ரஜினிகாந்துக்கு பிறந்த நாளாம். அவரது அடிப்பொடிகளை அழைத்து வைத்துக்கொண்டு செய்தி தொலைக்காட்சிகள் கலந்துரையாடல் என்ற பெயரில் ரஜினிக்கு ஒளி வட்டம் போட்டு விட்டு கொண்டிருந்தார்கள். ரஜினி அடுத்த ஆண்டு கட்சி தொடங்கி முதல்வர் ஆகி விடுவார் என்றே அனைவரும் கொம்பூதினார்கள். அது எப்படி சாத்தியம் என்று அந்த கொம்பூதிகள் விளக்கியதில் இருந்து மெய் சிலிர்க்க வைக்கும் சில பல துளிகள்.
அவர் கண் சும்மா புலி கண்ணு மாதிரி இருக்கும்
வில்லனாக அறிமுகமாகி கதாநாயகனாக வெற்றி பெற்றவர்
குழந்தைகள் கூட அவரது படத்தை விரும்பி பார்க்கிறார்கள்
யார் வந்து கை கொடுத்தாலும் எழுந்து நின்று கை கொடுப்பார்
ஆன்மீகவாதி
வேகமாக நடப்பார்.
அவரோடு கொஞ்ச நேரம் பேசினாலும் அவரை போலவே நாமும் வேகமாக பேச ஆரம்பிப்போம்.
இந்த காரணங்களுக்காக தமிழக மக்கள் ரஜினிகாந்தை முதல் அமைச்சராக தேர்ந்தெடுக்க வேண்டுமாம் கால கொடுமை.இதையெல்லாம் நாம் காது கொடுத்து கேட்க வேண்டியிருக்கிறது.
ஆனாலும் ஒரு வகையில் அவர்களுடைய நேர்மைக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். அவர்களில் ஒருவர் கூட மறந்தும்
ரஜினி அறிவாளி , திறமையானவர அதனால் அவரை முதல் அமைச்சர் ஆக்க வேண்டும் என சொல்லவில்லை
No comments:
Post a Comment